தேதி: February 6, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. முத்துலெட்சுமி அவர்களின் முழு உளுந்து தோசை என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய முத்துலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.
இட்லி அரிசி - ஒரு கப்
பச்சரிசி - கால் கப்
முழு கறுப்பு உளுந்து - கால் கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

இட்லி அரிசி மற்றும் பச்சரிசி இரண்டையும் கலந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

முழு உளுந்து மற்றும் வெந்தயத்தை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

முதலில் உளுந்தையும் வெந்தயத்தையும் சேர்த்து நன்கு பொங்க அரைத்து வைக்கவும்.

பின்னர் ஊறிய அரிசியை மையாக அரைத்து எடுக்கவும்.

அதன் பிறகு அரைத்த உளுந்து மாவோடு அரிசி மாவை கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். மாவை புளிக்க விடவும்.

மாவு புளித்ததும் தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி தோசையாக வார்த்து எடுக்கவும்.

சுவையான முழு உளுந்து தோசை தயார். இதனை வெங்காய சட்னியுடன் பரிமாறவும்.

Comments
ஷீலா
உளுந்து தோலோடவே அரைகலாமா? நான் தோல் எடுத்துட்டு தான் அரைப்பேன். வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.
எல்லாம் சில காலம்.....
Bala
இதற்கு உளுந்து தோலோடு தான் அரைக்க வேண்டும்.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela