புடலங்காய் பொரியல்

தேதி: February 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் புடலங்காய் பொரியல் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

புடலங்காய் - 250 கிராம்
வேக வைத்த துவரம்பருப்பு - கால் கப்
தேங்காய்த் துருவல் - கால் கப்
வெங்காயம் - ஒன்று
சிவப்பு மிளகாய் - 3
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

புடலங்காய் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். மற்ற தேவையானவற்றையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பொடியாக நறுக்கிய புடலங்காயுடன் உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிசறி வைக்கவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அதனுடன் புடலங்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறவும்.
புடலங்காயில் தேவைக்கேற்ப தண்ணீர் தெளித்து வேக விடவும்.
காய் வெந்த பிறகு வேக வைத்த துவரம் பருப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்து கிளறவும்.
சுவையான எளிதில் செய்யக்கூடிய புடலங்காய் பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புடலங்காய் பொரியல் பார்க்கவே நல்லா இருக்கு. இது போல செய்த இல்லை. செய்து பார்க்கிறேன் .வாழ்த்துக்கள் கிச்சன் குயின்

கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க தர்சா,
ரொம்ப நன்றி.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela