தேதி: February 6, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. வாணி பாலகிருஷ்ணன் அவர்களின் காளான் சப்ஜி என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வாணி அவர்களுக்கு நன்றிகள்.
வெள்ளை பட்டன்(button) காளான் - 200 கிராம்
தக்காளி - 4
வெங்காயம் - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயத் தாள் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

காளானை நன்றாக கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

வெங்காயத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி குழைவாக வதங்கியதும் காளானைப் போட்டு வதக்கவும்.

காளான் சேர்த்து 5 நிமிடங்கள் கழித்து உப்பு, சாம்பார் பொடி சேர்த்து நன்றாக சுருள வதக்கவும்.

கலவை கொதித்து திக்கானதும் இறக்கி வெங்காயத் தாள் தூவி அலங்கரிக்கவும். சுவையான காளான் சப்ஜி தயார்.

Comments
கிச்சன் குயின்
வாழ்த்துக்கள் கிச்சன் குயின்
என்றும் அன்புடன்,
கவிதா