தேதி: February 6, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சாதிகா அவர்களின் ஹோட்டல் சாம்பார் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சாதிகா அவர்களுக்கு நன்றிகள்.
துவரம்பருப்பு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 4
மஞ்சள் தூள் - சிட்டிகை
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
கட்டிப் பெருங்காயம் - கால் தேக்கரண்டி
காரட் - 2
உப்பு - தேவைக்கு
வெல்லம் - சிறிய துண்டு
தாளிக்க:
கடுகு
வெந்தயம்
சீரகம்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை
பச்சைமிளகாய் - 2
எண்ணெய் - தேவையான அளவு
வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். காரட்டை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் துவரம்பருப்பு, சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், பெருங்காயம், வெல்லம் ஆகியவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

வெந்ததும் குழிக்கரண்டியால் நன்கு மசித்து விட்டு மேலும் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி காரட், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து மேலும் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.

தாளித்தவற்றை சாம்பாரில் சேர்த்து கொத்தமல்லித் தழை தூவி சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.

சுவையான ஹோட்டல் சாம்பார் ரெடி.

Comments
ஷீலா
ஒரு கிண்ணம் சாம்பார் பார்சல். பில் எவ்ளோப்பா? வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.
எல்லாம் சில காலம்.....
Kitchen queen sheela congrats
Kitchen queen sheela congrats
பாலநாயகி
என்ன பாலா , 1 கிண்ணம் தானா இன்னும் சேர்த்தே தருவேன்.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
Nisa
Thanks Nisa
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
ஷீலா
மீண்டும் மகுடம் சூடியமைக்கு வாழ்த்துக்கள் :) படங்கள் அழகா இருக்கு எல்லா குறிப்பிலுமே... ஆனாலும் எனக்கு இந்த குறிப்பு ரொம்ப பிடிச்சிருக்கு, அதான் இங்க பதிவு ;) அவசியம் நாளைக்கே செய்துட்டு சொல்றேன் ஷீலா.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா