தேதி: February 6, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ஹவ்வா அலியார் அவர்களின் வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஹவ்வா அவர்களுக்கு நன்றிகள்.
ஒட்ஸ் - அரை ௧ப்
பச்சை பட்டாணி - 5 மேசைக்கரண்டி
பீன்ஸ் - 5
காரட் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - சிறிது
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி
மல்லித் தழை - 2 மேசைக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
காய்கறிகளை மிக சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். மற்ற தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.

குக்கரில் காய்கறி கலவை, ஒட்ஸ், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து சூப்பில் சேர்க்கவும். அதனுடன் மிளகுத் தூள், சீரகத் தூள், உப்பு, மல்லித் தழை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.

அடுப்பை அணைத்து சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

சுவையான வெஜிடபுள் ஓட்ஸ் கஞ்சி தயார். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை சூடாக பரிமாறவும்.

Comments
ஷீலா
வாழ்த்துக்கள், எல்லா குறிப்புகளும் படங்களுடன் அழகாக உள்ளன. ஓட்ஸ் கஞ்சி ரொம்ப ஹெல்த்தியான டிஷ் :)