தேதி: February 6, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. வாணிரமேஷ் அவர்களின் காலிஃப்ளவர் பக்கோடா குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய வாணி அவர்களுக்கு நன்றிகள்.
காலிஃப்ளவர் - ஒன்று
கடலை மாவு - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
வெங்காயத்தாள் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி சுடுத் தண்ணீரில் போட்டு 5 நிமிடம் போட்டு வைத்திருந்து எடுக்கவும்.

காலிஃப்ளவருடன் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி பிசறி வைக்கவும்.

காலிஃப்ளவர் கலவையை 15 நிமிடம் ஊற விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசறி ஊற வைத்த காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

க்ரிஸ்பியான காலிஃப்ளவர் பக்கோடா ரெடி. வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி அதன் மேலே தூவவும்.

Comments
kesheelaraj
ஆஹா என்னோட பேவரிட் பக்கோடா, நாங்க காலி பிளவர டிப் பண்ணி செய்வோம், நீங்க எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி செய்றீங்க.....சூப்பர்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
nice and attractive. It
nice and attractive. It tasted good when I tried it. Thanks...
எனது குறிப்பை வெளியிட்ட
எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்குளூம், குறிப்பினை வழங்கிய வாணி ரமேஷ் அவர்களுக்கும் மிக்க நன்றி
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
Subi
உங்களது வாழ்த்திற்க்கு நன்றி
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
Malani maami
உங்களது வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி மாமி.
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela
ஷீலா சிஸ்
காலிஃப்ளவர் பக்கோடா ஈஸியாகவும் அழகாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.
காலிஃப்ளவர் வாங்கியிருக்கிறேன். நாளைக்கே செய்து பார்க்கிறேன்.
நன்றி!
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
மெர்சி
ரொம்ப தாங்ஸ் மெர்சி .
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..
அன்புடன்
Sheela