காய்கறிகள்

நான் Fridgeல் வைக்கும் காய்கறிகள் 5 நாட்களுக்கு மேல் வாடி வதங்கி விடுகிறது. காய்கறிகள் Freshஆக இருக்க வழி சொல்லுங்கள். (Fridge temperature is good).

அன்பு வினோதா, காய்கறிகளில் நம்மூர் காய்கறிகள் சீக்கிரத்தில் வாடிவிடும்.காரணம் அவைகள் எத்தனை நாட்கள் கழித்து நம்மை வந்து சேர்கின்றது என்று தெரியாது. இருந்தாலும் ஓரளவிற்க்கு வாடாமல் வைக்கலாம்.குளிர் சாதனப் பெட்டியில் காய்கறிகளில் மென்மையான ரகங்களை கன்டைனர்ஸில் தான் வைக்க வேண்டும்.அதற்கென்றுகொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் வைத்தால் நல்ல சீதோஷ்ண நிலை கிடைத்து அதிக நாட்களுக்கு வாடாது.மற்றபடி கேரட் பீட்ரூட்,முள்ளங்கி போன்ற ரூட் வகைகளை ஃபிரிட்ஜில் நேரிடையாக வைத்தாலே போதும்.அதிக நாட்களுக்கு வாடாமல் இருக்கும்.
கீரைவகைகளை மட்டும் காகித நேப்கினால் சுற்றி பிளாஸ்டிக் உறைகளில் போட்டு கன்டைனரில் வைத்து விட்டால் குறைந்தது இரண்டு வாரம் வரையில் வாடாமல் இருக்கும்.
ஆனால் ஒன்று அதிக நாட்கள் வாட வில்லை என்பதற்க்காக காய்கறிகளை அதிக நாட்கள் வரையில் வைத்திருந்து உண்பதால் அதிலுள்ள சத்துக்களை இழப்பதுடன் தேவையில்லாமல் சர்க்கரையையும் சேர்த்துக் கொள்ளும் நிலை ஏற்படும். ஆகவே எதையும் அளவோடு வாங்கி வைத்து உடனுக்குடன் உபயோகிப்பது தான் ஆரோக்கியத்திர்க்கு நல்லது.நன்றி.

வினோ..

எனக்கும் இதே கஷ்டம் இருந்தது. இப்போது தான் ஒரு வழியாக சமாளிக்கறேன்.

பீன்ஸ், கொத்தவரங்காய், அவரைக்காய் போன்ற காய்களை டிஷ்யுவில்(tissue paper) மூடி துணியில் மூடி வைக்கலாம்.

கீரையை தேவைப்படும்போது மண் போக அலசி உபயோகிக்கவும். மீதியை கவரோடு வைக்கவும்.

கொத்தமல்லியை வாங்கியவுடன் ஆஞ்சு சிப் லாக்(zip lock)கவரில் வைக்கவும். தேவைப்படும் போது தேவையானவையை அலசி எடுத்துக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை காம்பு கிள்ளி வைக்கவும்.

மத்தபடி மிச்ச காய்களை அப்படியே வைக்கலாம்.

Manohari அவர்களுக்கு நன்றி.

Santhiya Ravi அவர்களுக்கு நன்றி.

மேலும் சில பதிவுகள்