பாம்பே லஸ்ஸி

தேதி: February 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திரு. ஆகாஷ் அவர்களின் பாம்பே லஸ்ஸி குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஆகாஷ் அவர்களுக்கு நன்றிகள்.

 

பால் - கால் லிட்டர்
தயிர் - கால் லிட்டர்
ஐஸ் கட்டி - 10
சர்க்கரை - தேவையான அளவு
பன்னீர் - ஒரு மேசைக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
பாலை நன்கு ஏடு படியக் காய்ச்சி, ஏட்டினைத் தனியாய் எடுத்து வைக்கவும். மீதமுள்ள பாலைத் தனியாக வைக்கவும்.
பால் ஏடு, தயிர், பால், ஐஸ் கட்டி, சர்க்கரை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு நுரை பொங்கி வரும் வரை அடிக்கவும்.
பன்னீரை இதனுடன் சேர்த்து அருந்த மிகவும் சுவையாக இருக்கும். சுவையான பாம்பே லஸ்ஸி தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்