கவாபட் ரைஸ்

தேதி: February 10, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

திருமதி. ஜுலைஹா அவர்களின் தாய்லாந்து உணவான கவாபட் ரைஸ் குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜுலைஹா அவர்களுக்கு நன்றிகள்.

 

பாசுமதி அரிசி - ஒரு குவளை
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 2
நெய் மற்றும் எண்ணெய் - 50 கிராம்
சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
வினிகர் - அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் - கால் தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதி
உப்பு - தேவையான அளவு
முட்டை - ஒன்று
மல்லித் தழை - ஒரு சிறிய கட்டு


 

அரிசியை உதிர் உதிராக வடித்து வைக்கவும். பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை விதையை நீக்கி இரண்டாக கீறி வைக்கவும் வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கி வைக்கவும்
முட்டையை உடைத்து ஊற்றி அடித்து பொரித்து வைக்கவும்
பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கி பாதியளவு வெந்ததும் நறுக்கிய தக்காளியை சேர்த்து மூன்று நிமிடம் கிளறவும். அதில் பொடியாக நறுக்கிய பூண்டு, விதை நீக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் சோயா சாஸ், மிளகுத் தூள், எலுமிச்சை சாறு, வினிகர் அனைத்தையும் சேர்த்து நன்றாக ஐந்து நிமிடம் கிளறவும்.
பின்னர் அதில் வடித்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லித் தழை தூவி பத்து நிமிடம் தம்மில் போடவும்
கடைசியில் பொரித்த முட்டையை சேர்த்து சூடாக பரிமாறவும்.
சுவையான கவாபட் ரைஸ் தயார்.

இது தாய்லாந்தில் செய்யும் ஒருவகை சாதம். விரும்பியவர்கள் சிறிது அஜினோமோட்டோ சேர்த்துக் கொள்ளலாம்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அடிக்கடி மகுடம் சூடி முகப்பை அலங்கரிக்கிறீங்க :) சூப்பரா இருக்கு இம்முறையும் எல்லா குறிப்புகளும். வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பரா இருக்கு. நான் ஃப்ரைடு ரைஸ் செய்றப்போ முட்டை வறுத்து அதிலேயே வெங்காயம் எல்லாம் வதக்குவேன். தக்காளி சேர்க்க‌ மாட்டேன். இது மாறி செய்தது இல்ல‌. கண்டிப்பா ட்ரை பண்றேன். வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

வாழ்த்துக்கள் கிச்சன் குயின். கலர்ஃபுல் ரைஸ்.

Be simple be sample

கவாபட் ரைஸ் கலர்புல்லா இருக்கு

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

கவாபட் ரைஸ் சூப்பரா இருக்கு

கவாபட் ரைஸ் சூப்பரா இருக்கு

கவாபட் ரைஸ் சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்