வாழ்க்கை மேல் ஒரு வெறுப்பு

எனக்கு என்ன பிரச்சனை தெரியல.மன நிம்மதி இல்லாமால் உள்ளேன்.என் தம்பியால் விட்டில் பல பிரச்சனை கடைசியில் அந்த பிரச்சனைக்கு நான் தான் கராணம் என்று சொல்லுகிறார்கள்.
நான் என் அம்மா வீட்டிற்க்கு வந்தால் என் அம்மா,அப்பா,தம்பி என்னை விரோதியா பார்ப்பது போல் பார்க்கிறார்கள்.நான் என் அம்மா விட்டிற்க்கு வருவதே என் அண்ணிகளே பார்ப்பதற்க்கே வருகிறேன்.ஒரு சில சமயம் எதற்க்கு வாழ்கிறேன் என்று சந்தேகமாக உள்ளது.....
என் அண்ணி எல்லோரும் யாரையும் நம்பதே உன் வாழ்க்கை உன் கையில் மனதை விட்டு விடாதே தூராம போய் நல்ல வாழு யார் கண்ணிலும் படாதே...எங்கள் ஆசி எப்போதும் உன்னுடன் இருக்கும்...அவர்கள் எதற்க்கு இப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை....
இது ஒன்று மட்டும் எனக்கு புரிகிறது இனி உன் அம்மா விட்டிற்க்கு வராதே என்று சொல்ல வருகிறார்கள்..

தம்பியால் வரும் பிரச்சினைக்கு நீ தான் காரணம்னு உனக்கு எப்படி தெரியும்? வாழ்க்கை ஒரு தடவைதான் அதை வாழ்ந்துட்டு போவோம்.பிரச்சினைகள் வந்துட்டுதான் இருக்கும்.விரோதியா பார்க்கிறாங்கன்னு உனக்கு எப்படி தெரியும்? ஏன் அண்ணி அப்படி சொல்றாங்க திவ்யா?

அன்பு தோழி. தேவி

கவலைபடாதீங்க‌ எல்லாம் சரியாகிடும். ரொம்ப‌ யோசிக்காதீங்க‌. ஃப்ரீயாவிடுங்க‌. அப்பா அம்மாவ‌ விட‌ அண்ணிங்க‌ பாசமா இருக்கிறாங்களா? அந்த‌ விதத்துல‌ நீங்க‌ கொடுத்து வச்சவங்கதான். என் அண்ணியும் நானும் கொஞ்சதூரத்துல் ஒரே ஊர்லதான்ப்பா இருக்கோம். பார்த்தே கிட்டதட்ட‌ 3மாதம் ஆகிடுச்சு.

தூரமானா எங்க‌ போக‌ சொல்றாங்க‌. நம் வாழ்க்கை நம்கையில்தான் இருக்குது. எதுக்கு வாழனும்னுலாம் யோசிக்காதப்பா. தப்பு கண்ணத்தில் போட்டுக்கோ. பையன‌ பார்த்து மனதை தேற்றிகோப்பா சரியா?

அம்மாவீட்லயும் பிரச்சனை, ஹஸ்பண்ட் வீட்டிலயும் பிரச்சனைனா மனம் இப்படிதான் இருக்கும் நானும் அதை அனுபவித்து கொண்டிருப்பதால்தான் சொல்றேன். ரிலாக்ஸ். சமாளிப்போம். நல்லதே நடக்கும்னு நம்புவோம். வேண்டிப்போம் ஒகே.

நன்றி

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

திவ்யா கவலைப்படாதீங்கப்பா எந்த ஒரு அப்பா அம்மாவும் தன் பிள்ளைகள வெறுக்கமாட்டாங்கப்பா உங்க பிரச்சனைய மனசுவிட்டு பேசுங்க உங்க மேல எந்த தப்பும் இல்லன்னு அவங்களுக்கு புரியவைங்க அப்படி உங்க மேல ஏதாவது தப்பு இருந்த மனசார மன்னிப்பு கேளுங்கள.....எல்லாம் சரியாகிடும் நம்புங்கள...

Hi Dhivya,
Ella thozhigalum solvathu pola kavalai vendam, namma vazhkaila enbam thunbam erandume vandhu vandhu than poogum, ekkaranam kondum ungaloda appa amma va vittu vilagatheenga.. ungaloda prachanaiya puriya vaiyunga anbala edhayum sadhikalam,.. Neenga erangi ponga thappu ella..

Unga anni unga mela akkaraiyathan pesuranganu solla mudiyathu, so appa amma va vitratheenga.. avangakitta manamthirathu pesunga,..
parents always forgive and love their child.

Kadavula prarthanai senjikonga..

Regards
Revathy

Love is God!!!

இதுக்கு முன்னாடி ஒரு இழையில் கணவரை விட்டு தனியாக இருப்பதாக சொல்லி இருந்த நியாபகம்... சரி தானா? உங்கள் குழந்தை உங்களோடு இருக்கிறான்? வயது?

உங்களுக்கு அண்ணிகள் மேல் பிரியம் அதிகம் போலும். முன்பு மாட்டு பால் கொடுக்க சொன்னார்கள் என்றீர்களே... நீங்கள் தானே?

சரி... எதையும் ஆராய்ச்சி பண்ண வேண்டாம். ஒரு விஷயத்தை மனதில் வைக்க வேண்டும். திருமணம் ஆகும் வரை தான் தாய் வீடு. ஆன பின் தாய் வீட்டில் உரிமைகள் குறைந்து போகும்... எல்லோருக்கும் ஏறக்குறைய இப்படி தான் அதுவும் முக்கியமா உடன் பிறந்த ஆண்கள் இருக்கும் வீட்டில், அந்த ஆண்களும் திருமணம் ஆனவர்கள் என்கிற வீட்டில் நிச்சயம் உரிமை இல்லை தான். இங்கேயே எத்தனையோ பெண்கள் நாத்தனார் வந்து வீட்டில் இருக்கிறார், கணவர் அவர்களுக்கு எல்லாம் செய்வது பிடிக்கவில்லை என்று பதிவிட்டு பார்த்திருக்கிறேன். அவர்களை சொல்லி தப்பில்லை, எங்கே கணவர் சம்பாத்தியம் முழுவதும் தன் உடன் பிறப்புக்கே போகுமோ, நாம் நடு தெருவில் நிற்க வேண்டி வருமோ என்றெல்லாம் ஒரு பயம் அவர்களுக்கு. இந்த கதை எல்லாம் நமக்கு இப்ப வேண்டாம்.

ஒன்னு சொல்லுங்க... நீங்க இனி உங்க கணவரோடு சேர்ந்து வாழ்ப்போவதே இல்லையா? இந்த பிரிவு நிரந்தரமா? தற்காலிகமானதா? உங்க முடிவு என்ன? என்னை கேட்டால் அப்பா அம்மா காலம் வரை தான் பிறந்த வீடு... எத்தனை உடன் பிறப்பு இருந்தாலும் பெண்ணுக்கு அதன் பின் தாய் வீட்டில் உரிமை இருக்காது. ஆனால் இது இனி என் குடும்பம் என்று வாழப்போன வீட்டில் நமக்கு முழு உரிமை நிச்சயம் உண்டு. நம் உரிமைகளை கேட்டுப்பெற வேண்டிய இடமும் அது தான். நீங்கள் திருமணம் செய்யும் முன்பே விருப்பமில்லை என்று சொன்னதாக நினைவு. அந்த மனப்போக்கை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு உங்கள் கணவரிடம் சுமூகமாக போக முடியுமா என்று ஏன் சிந்திக்க கூடாது? உங்கள் அண்ணா அண்ணியிடம் எல்லாம் விட்டுக்கொடுத்து இங்கே கொட்டு வாங்கி வாழ்வதை விட ஏன் கணவரோடு வாழ்க்கையை விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழ்வதை பற்றி சிந்திக்க கூடாது? கொஞ்சம் யோசிங்க. உடலும் உயிருமாக இணைந்தவர்கள் நீங்கள்... உங்களுக்குள் ஈகோ, கவுரவம் எல்லாம் பாராமல் ஒருவர் விட்டுக்கொடுத்து முதலடி எடுத்து வைக்கலாமே... அதன் பின்னும் இது இயலாது என்று இருவருக்கும் தோன்றினால் வேறு வழி பார்க்கலாம்.

வேறு வழி என்றேனே தவிற நிச்சயம் அது தாய் வீடு அல்ல. திருமணம் ஆன பெண், தாய் வீடு வந்தால் பாரமே நம் சமூகத்தில். உங்கள் வருகை அந்த வீட்டில் நிம்மதியை, மகிழ்ச்சியை கலைக்க விடுவானேன்? அவர்கள் உங்களூக்கு செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்பதே தப்பு தான். இனி கணவர் வீடு இல்லை என்றானால் உங்கள் படிப்புக்கு ஏற்ற ஒரு வேலையை பார்ப்பது நல்லது. குழந்தை தன்னை தானே பார்த்துக்கொள்ளும் அளவு வளரும் வரை தாய் வீட்டில் தங்கி பணிக்கு செல்லுங்கள். சற்று வளர்ந்து பள்ளியில் முழு நேரம் இருக்க துவங்கியதும், தனித்து வாழ பழகிக்கொள்ளுங்கள்.

நான் சொல்வது கசப்பாக இருந்தாலும் நம்ம சமூகத்தில் பெண்களுக்கான நிலை இது தான். தாய் வீடு திருமணம் வரை மட்டுமே... அதன் பின் மகிழ்ச்சியோ துக்கமோ தன்னை தானே பார்த்துக்கொள்ளும் பக்குவமும், தைரியமும் பெண்ணீடம் வர வேண்டும். முடிவெடுங்கள்... என்னை கேட்டால் வேலைக்கு போகாமல் தாய் வீட்டில் இருப்பதை சரி என்று சொல்ல மாட்டேன். கண்டுக்காம போகலாம்... எவ்வளவு காலம்? அதுவும் இருக்கில்ல... காலத்துக்கும் உங்கள் அண்ணன், தம்பி, வீட்டுக்கு வாழ வந்த பெண்கள் உங்களை தாங்க வேண்டும் என்று எதிர் பார்ப்பது சரியாக வராது திவ்யா. யோசிச்சு முடிவெடுங்க. முடிந்தவரை கணவரை புரிந்து கொள்ள மனதை தயார் பண்ணுங்க... அவரிடம் பேசிப்பாருங்க. பேசினால் தீராத பிரெச்சனை என்று ஒன்றுமில்லை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hellow divya,
kavalaipadathinka manasuvittu unga appa ammakitta pesunga.ellam sariyaidum
pl thuram mattum pogadhinga romba kastam anubaikavendi varum. thappu yaridathil ulladhu endru
kavanithu pesunga.manasa pootu kuzhalapikkathinga.karthar ungalai kaiveedamattar.nan praypandren ungalukkaka.ennakku english varaadhu pl adjest pannikanga.

hellow divya,
kavalaipadathinka manasuvittu unga appa ammakitta pesunga.ellam sariyaidum
pl thuram mattum pogadhinga romba kastam anubaikavendi varum. thappu yaridathil ulladhu endru
kavanithu pesunga.manasa pootu kuzhalapikkathinga.karthar ungalai kaiveedamattar.nan praypandren ungalukkaka.ennakku english varaadhu pl adjest pannikanga.

உங்கள் எல்லாப் பதிவுகளும் படித்தேனாவென்று தெரியாது. படித்திருந்தாலும் நினைவு இராது எனக்கு.

//எனக்கு என்ன பிரச்சனை தெரியல. மன நிம்மதி இல்லாமால் உள்ளேன்.// நிம்மதி, சந்தோஷம் எல்லாம் எங்களுக்கு உள்ளேயேதான் இருக்கிறது. வெளியே இருந்து வருவதில்லை எதுவும். உங்களுக்கு வெறுப்பு வாழ்க்கை மேலா அல்லது உங்கள் மேலா!! இரண்டாவதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. :-)

//நான் என் அம்மா வீட்டிற்க்கு வந்தால் என் அம்மா, அப்பா, தம்பி என்னை விரோதியா பார்ப்பது போல் பார்க்கிறார்கள்.// நீங்களே, "விரோதியா பார்ப்பது போல்" என்று சொல்கிறீர்களே தவிர, விரோதியாகப் பார்க்கிறார்கள் என்று சொல்லவில்லை. :-)

//நான் என் அம்மா விட்டிற்க்கு வருவதே என் அண்ணிகளே பார்ப்பதற்கே வருகிறேன்.// :-) ஒரு வேளை இதுதான் பிரச்சினையோ! இப்படி அவர்கள் முன்னால் சொன்னீர்களா? அல்லது அம்மா, அப்பாவை, தம்பியைப் பார்க்க வரவில்லை என்பது போல உங்கள் நடத்தை இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் அடிபட்டிருக்கலாம். நீங்களே அண்ணிகளைப் பார்க்கத்தான் போவதாகச் சொல்கிறீர்கள். அப்படியானால் உங்களுக்கு ஏற்கனவே வீட்டிலுள்ள மீதிப் பேரைப் பிடிக்கவில்லை, அப்படித்தானே! :-) பின்னே அவர்களுக்கு மட்டும் எதற்காக உங்களைப் பிடிக்க வேண்டுமாம்!!

//ஒரு சில சமயம் எதற்க்கு வாழ்கிறேன் என்று சந்தேகமாக உள்ளது.....// ஏன்? இதுவரை உங்களால் யாருக்கும் எந்தப் பயனும் இருந்தது இல்லையா! அத்தனை பயனும் இனிமேலும் இருக்கத்தான் போகிறது. இது வரை இருந்திராவிட்டால்... இனிமேல் பயனுள்ளதாக வாழ்க்கையை ஆக்கிக் கொள்ளுங்களேன். எப்படி என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

//என் அண்ணி எல்லோரும் யாரையும் நம்பதே உன் வாழ்க்கை உன் கையில் மனதை விட்டு விடாதே// இவ்வளவும் சொன்னது சரிதான். ஆனால், //தூராம போய் நல்ல வாழு யார் கண்ணிலும் படாதே...// என்று சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது!! இது உங்கள் வாழ்க்கை. மற்றவர்கள், நாங்கள் உட்பட என்ன சொன்னாலும்... உங்களுக்கென்று சுயசிந்தனை இருக்க வேண்டும். சரிபிழை ஆராய்ந்து நடந்துகொள்ளுங்கள். அண்ணிமார் சொல்வதைக் கேட்பீர்கள் என்று தெரிகிறது. அவர்கள்தான் சொல்லியிருக்கிறார்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று. :-) புரிகிறதா! அவர்களையும் நம்ப வேண்டாம். :-)

வாழ்க்கை எதுவென்பதைப் புரிந்துகொள்ளுங்கள். //அவர்கள் எதற்க்கு இப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை....// ஒருவர் வாழ்க்கையில் இன்னொருவர் தலையிட உரிமை இல்லை. //ஒன்று மட்டும் எனக்கு புரிகிறது இனி உன் அம்மா விட்டிற்க்கு வராதே என்று சொல்ல வருகிறார்கள்..// அதைச் சொல்ல உங்கள் அம்மாவுக்கு உரிமை இருக்கிறது, நிச்சயம் அண்ணிமாருக்கு இல்லை.

எனக்குத் தோன்றுவது வேறு. இடம் கொடுத்தால் இதையே பிடித்துக் கொண்டு அம்மா வீட்டிற்குப் போகிறீர்கள். இதனால் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையில் உள்ள இடைவெளி பெருத்துப் போய் நிரந்தரம் ஆகிவிடக் கூடாதேயென்கிற நல்ல எண்ணத்தில் கூட உங்கள் வீட்டார் உங்கள் வருகையைத் தவிர்க்க நினைக்கலாம். உங்கள் நல்லதற்காக எல்லோருமாகச் சேர்ந்து செய்கிற காரியம் இது என்று நினைக்கிறேன்.

முடிஞ்சா உங்க கணவரோடு சமாதானமாக வாழுற வழியைப் பாருங்க. முடியவே முடியாது என்று தோன்றினால்... ஒரு வேலை தேடிக்கங்க. குழந்தையை நல்லபடியா வளர்க்கப் பாருங்க. உங்க பிரச்சினை அந்தச் சின்ன மனசைப் பாதிக்க விடாதீங்க. பாவம் அது. ஒரு குழந்தை ஆரோக்கியமாக நல்லபடி வளர, பாட்டி, பாட்டா, மாமிமார் அவசியம் இல்லை. அது எல்லாம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் போல. ஆனால் அம்மாவும் அப்பாவும் நிச்சயம் வேணும். அவங்க ஒருத்தர் மேல் ஒருத்தர் பிரியமாக இருந்தால்தான் சின்னவர் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆசையாகத்தானே குழந்தை பெற்றுக் கொண்டீர்கள்? நல்லபடி வளர்க்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. இப்போ புரிகிறதா எதற்காக, யாருக்காக வாழ வேண்டும் என்று!

‍- இமா க்றிஸ்

நான் கூறியது ரூபினி அக்காவின் இழையில் எனக்கு குழந்தை பிறந்த போது நடந்தை கூறினேன்.3 மாதத்தில் குழந்தை எடுத்து கொண்டு சென்று விட்டேன்.அதில் இருந்து நான் தனியாக தன் பாத்து கொள்கிறேன்..இப்போது என்னுடய பிரச்சனை என் தம்பி தான்..அவனால் வீடே அல்லோ படுகிறது.(.அண்ணிகள் எல்லோரும் என் சொந்த அண்ணிகள் இல்லை எல்லோரும் என் பெரியப்பாக்களின் மருமகள்)எனக்கும் பெற்றவர்களின் மீது வெறுப்பு வர அளவிற்க்கு செய்து விட்டான்.
//தேவி அக்கா//என் வீட்டில் பிரச்சனை வருவதற்க்கு அவர்கள் கூறும் கராணம் நீ வந்தாதல் தான் இவ்வளோ பிரச்சனை நீ வராமல் இருந்தால் யாருக்கும் பிரச்சனை இல்லை என்று நேரடியாக என்னிடமே கூறுகிறார்கள்.
.//இமா அம்மா,வனி அக்கா//நான் இப்போது என் கணவருடன் நல்லபடியாக வாழ்கிறேன்.அவரும் இப்போது எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.அவருடன் எந்த பிரச்சனையும் இல்லை.. குழந்தைக்கு 2 வயது ஆகிறது.என் அண்ணிகள் எல்லோரும் நான் தப்பு செய்தால் திட்டுவார்கள் நல்லது செய்தால் பாரட்டமால் இருக்க மாட்டார்கள்.என் அண்ணண்கள் யாருக்கும் என் தம்பியா பிடிக்காது என்னெறால் வயதுக்கு தகுந்த மரியாதை தர மட்டான்.ஏன் அப்படி சொன்னார்கள் என்று மட்டும் புரியவில்லை...பெத்தவிங்க கூட ஒரு கட்டத்தின் மேல் பிள்ளைங்க பாராம ஆயிடறாங்க..கணவனின் ஆதரவும் இல்லாமல் பெத்தவிங்க ஆதரவும் இல்லாமால் எதும் செய்ய முடியாதுனு மட்டும் தெரியும்.
ஒரு முறை என் அப்பாவுக்கு,அம்மாவுக்கு,தம்பிக்கு பிரச்சனை நானும் அன்று தான் விட்டிற்க்கு வந்தேன்..எனக்கு என்ன நடந்ததுனு தெரியாது கடைசியில் நான் தான் அந்த பிரச்சனைக்கு ஆன கராணம்னு சொல்லிட்டாங்க.பிறகு குழந்தையை வாங்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க...இரவு 11 மணி என் பெரியப்பாவிடம் சென்று அழுதேன் பையனை வாங்கி கொண்டு வீட்டை விட்டு வெளியே போனு சொல்றாங்கனு...என் பெரியம்மா,பெரியப்ப்பா,அண்ணண் எல்லோரும் வந்து சண்டை போட்டு வீட்டில் விட்டு போனார்கள்...வரட்டு கெளரவம் பிடித்தவார்களுக்கு பெண்ணை பிறந்தால் இப்படி தான்..உன் அக்கா செத்தது போல் நியும் செத்து இருந்தால் இவர்களுக்கு பிரச்சனை இல்லாமல் போய் இருக்கும்...உன் தலை விதி யாரால் மாத்த முடியும் என்று என் பெரியப்பா கூறிவிட்டார்....

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

நான் யாரிடமும் ஈகோ பார்க்க மாட்டேன்..என் மேல் தப்பு இருந்தாலும் இல்லை என்றாலும் நானே மன்னிப்பு கேட்பேன்.
இமா அம்மா எனக்கு வீட்டில் மீதம் உள்ளவார்களின் மேல் கொஞ்சம் கோபம் அதனால் பிடிக்கமால் போனது.
வனி அக்கா,.என்னை தாங்க வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை..

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

மேலும் சில பதிவுகள்