வாழ்க்கை மேல் ஒரு வெறுப்பு

எனக்கு என்ன பிரச்சனை தெரியல.மன நிம்மதி இல்லாமால் உள்ளேன்.என் தம்பியால் விட்டில் பல பிரச்சனை கடைசியில் அந்த பிரச்சனைக்கு நான் தான் கராணம் என்று சொல்லுகிறார்கள்.
நான் என் அம்மா வீட்டிற்க்கு வந்தால் என் அம்மா,அப்பா,தம்பி என்னை விரோதியா பார்ப்பது போல் பார்க்கிறார்கள்.நான் என் அம்மா விட்டிற்க்கு வருவதே என் அண்ணிகளே பார்ப்பதற்க்கே வருகிறேன்.ஒரு சில சமயம் எதற்க்கு வாழ்கிறேன் என்று சந்தேகமாக உள்ளது.....
என் அண்ணி எல்லோரும் யாரையும் நம்பதே உன் வாழ்க்கை உன் கையில் மனதை விட்டு விடாதே தூராம போய் நல்ல வாழு யார் கண்ணிலும் படாதே...எங்கள் ஆசி எப்போதும் உன்னுடன் இருக்கும்...அவர்கள் எதற்க்கு இப்படி சொல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை....
இது ஒன்று மட்டும் எனக்கு புரிகிறது இனி உன் அம்மா விட்டிற்க்கு வராதே என்று சொல்ல வருகிறார்கள்..

என்னமோ நிறைய விஷயம் இருக்கு. அப்போ நாங்கள் எதுவுமே சொல்ல இயலாது. //எனக்கும் பெற்றவர்களின் மீது வெறுப்பு வர அளவிற்க்கு செய்து விட்டான்.// உங்கள் மேல் தப்பு இல்லையென்றால் சொல்லிப் பார்க்கலாமே! முடியாவிட்டல்... அமைதியாக இருங்கள். எல்லாவற்றையும் காலம் சரிசெய்யும்.

‍- இமா க்றிஸ்

ஆமாம் இமா அம்மா,நிறைய இருக்கிறது..எதை சொல்ல எதை விடுவது என்று தெரியவில்லை..எனக்கே குழப்பமாக உள்ளது...கடந்த இரண்டு வருடமாக இவர்களால் நான் மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்..அந்த அளவுக்கு என்னை கோவகாரியாக மாற்றி விட்டனர்.எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை...நானும் பல முறை எடுத்து கூறியும் நான் சொல்லுவதை காது குடுத்து கேட்க மறுக்கிறார்கள்.இப்படியா போனால் இது எங்க போய் முடியும்னு தெரியல...நிங்கள் சொல்லுவது போல் எனக்கான காலம் எப்போ மாறும் என்று காத்து கொண்டு இருக்கிறேன்..

நாங்க சொன்னது ஹர்ட் ஆயிருந்தா மன்னிக்கணும்... எங்களுக்கு முழு தகவல் தெரியாதே, இங்கே சொன்ன சிலதை வைத்து தானே பதில் சொல்கிறோம், தவறாக எண்ண வேண்டாம். நீங்க உங்க கணவரோட் வாழ்கிறிர்கள் என்பது இப்போதைக்கு எங்களுக்கு மகிழ்ச்சி... மற்றதை காலம் மாற்றும். நம்பிக்கையோடு மனதை நிம்மதியாக அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள். முடிஞ்சா யோகா, மெடிடேஷன் எதாவது ட்ரை பண்ணுங்க. பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாரவயில்லை வனி அக்கா,நான் தவறாக எண்ணவில்லை...நான் சொன்னதே அறை குறையான தகவல்...நிங்கள் சொன்னது போல் இப்போது மெடிடேஷன் செய்து கொண்டு இருக்கிறேன் கடந்த ஆறு மாதமாக டாக்டர் மருந்து எல்லாம் நிறுத்தி விட்டார்.மெடிடேஷன் செய்ய சொல்லியும் அறிவுரை சொல்லியுள்ளார் காலை எழுந்தவுடன் அரை மணி நேரம் மாலை 5 மணிக்கு அரை மணி நேரம் செய்வேன்....முன்பு இருந்த மன வலிமை இப்போது பலகீனம் ஆகி கொண்டு வருகிறது..அது தான் மிகவும் கவலையாக உள்ளது..

//.எதை சொல்ல எதை விடுவது// எங்களிடம் பகிர்ந்து கொள்வது உங்களுக்கு மன ஆறுதலைத் தரும் என்றால் பகிர்ந்து கொள்ளுங்க. பார்த்து, அளவோட. இங்க இருக்கிறது உங்க நிஜப் பெயரா? இங்க கொட்டிட்டா... அதுல யாராவது பதிலளி தட்டிட்டா, பிறகு "தப்புப் பண்ணிட்டமோ1 எடிட் பண்ணலாமோ!" என்று நினைச்சாலும் முடியாது. பார்த்து.

//இவர்களால் நான் மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்.// இல்லை. நீங்கள் நினைக்காமல் யாராலும் உங்களைக் குழப்ப முடியாது. பிரச்சினைக்குரிய ஆட்களை சிந்தனைகளை இனிமேலாவது எட்ட வையுங்கள். சிந்திக்கிறதால எதுவும் சரியாகாது. குழப்பம் இன்னும் அதிகமாகும். //நானும் பல முறை எடுத்து கூறியும் நான் சொல்லுவதை காது குடுத்து கேட்க மறுக்கிறார்கள்.// அப்ப விட்டுருங்க. எதுவும் சொல்லாதீங்க. கொஞ்ச காலம் விட்டுருங்க. குடும்பம் என்று இருந்தால் இதெல்லாம் சகஜம்தான். காலம் அமைய எல்லாம் சரியாகும். அப்போ திரும்பிப் பார்த்தால்... நஷ்டப்பட்டிருப்பது நீங்கள் மட்டும்தான் என்பது தெரியும். காலத்தை வீணடிக்காதீங்க.

//இப்போது பலகீனம் ஆகி கொண்டு வருகிறது..அது தான் மிகவும் கவலையாக உள்ளது..// நீங்க மனசு வைச்சா.... இதை ஒரு கவலை என்று எண்ணாமல் ஒரு நிகழ்வு மட்டும் என்று எடுத்துட்டு போக முடியும். உங்களால திருத்த முடியாததைப் பற்றிக் கவலைப்படுவானேன்; உடலைக் கெடுத்துக் கொள்வானேன்! விடுங்க திவ்யா.

//.இப்படியா போனால் இது எங்க போய் முடியும்னு தெரியல.// அதைப் பற்றிக் கவலை வேண்டாம். எங்க போயாச்சும் முடியட்டும். நீங்க இப்போதைக்கு செய்ய வேண்டியது... உங்க கணவர் குழந்தையோட சந்தோஷமா இருக்கிறது. ட்ரை பண்ணுங்க. உங்க ஹெல்த் முக்கியம். மனம் ரிலாக்ஸ்ட் ஆகுற மாதிரி ஏதாச்சும் பண்ணுங்க. பாட்டுக் கேளுங்க. பிடிச்சதா ஏதாவது பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

//.முன்பு இருந்த மன வலிமை இப்போது பலகீனம் ஆகி கொண்டு வருகிறது..// - இது நம்மால் வருவது. பிரெச்சனையே வந்தாலும் அதை பிரெச்சனையா நினைக்காம வெறும் வாழ்வில் ஏதோ கற்றுக்கொள்ள நடந்த ஒரு விஷயம் என்று எடுக்கும் மனநிலை எல்லோருக்கும் வருவதில்லை, ஆனால் வர வேண்டிய விஷயம். பிரெச்சனையை பற்றியே நினைப்பதால் பிரெச்சனை சரியாகாது... நம்ம கையை மீறிய விஷயங்களை மனதில் வைத்து புழுங்குவதால் அவற்றுக்கு தீர்வு கிடைத்துவிடாது. சில நேரம் அல்ல பல நேரம் “டேக் இட் ஈசி” தான் நம்மை ஆரோகியமாக வைக்கும். எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டால் மனதில் தோல்விகள் இருக்காது, ஏக்கங்கள் இருக்காது. இது ஆரோக்கியமான மனதை தரும். வருவதை அப்படியே ஏற்றுக்கொண்டு அந்த நிமிடம் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து முடிவெடுத்து அடுத்த ஸ்டெப்புக்கு போயிடணும்.

பிரெச்சனையை மீண்டும் மீண்டும் நினைத்து “எனக்கு மட்டும் ஏன் இப்படி??” என்று எண்ணி எண்ணியே பாதி பேர் மன நோயாளி ஆகிறோம். ”இதை விட பெறும் பிரெச்சனைகளை சந்திக்கின்ற மக்கள் உண்டு, நாம் எவ்வளவோ தேவல”ன்னு நினைக்க பழகுங்க. ”என் மனம் எதையும் தாங்கும் தைரியம் கொண்டது”ன்னு உங்களுக்கு நீங்களே அடிக்கடி நம்பிக்கை கொடுத்துக்கங்க. இது போன்ற பிரெச்சனைகளை என் மனதுக்குள் அனுமதிக்க மாட்டேன்னு முடிவெடுங்க. நிம்மதியா இருப்பீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதில் இருப்பது எனது நிஜ பெயர் தான்..கண்டிப்பாக நான் என் மனதில் இருப்பது பகிர்ந்து கொள்வேன்...ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பதிவு இடுகிறேன்,,நிங்கள் சொல்லுவது போல் செய்கிறேன் தோழிகளே...மனதை மாற்றி கொள்கிறேன்...

மேலும் சில பதிவுகள்