தேதி: February 11, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உருளைக்கிழங்கு - அரை கிலோ
ப்ரெட் - 5 அல்லது 6
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லித் தழை - அரைக் கட்டு
ரொட்டித் துண்டுகள் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - சிறிதளவு
தேவையானவற்றை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கினை கழுவி இரண்டாக நறுக்கி வேக வைக்கவும்

கிழங்கு வெந்ததும் எடுத்து நன்கு மசித்து வைக்கவும்.

ப்ரெட் துண்டுகளை 5 நிமிடம் வெது வெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.

ஊறிய ப்ரெட் துண்டுகளை நீரினைப் பிழிந்து எடுத்து பிசைந்து வைக்கவும்.

கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் ப்ரெட், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

கலந்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கையினால் வடை போல் தட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

வெளியே மொறுமொறுப்பாவும் உள்ளே சாஃப்டாகவும் உள்ள உருளை டிக்கி ரெடி.

Comments
சுமி அக்கா
ரெசிபி சோ கிரிஸ்பி அன்ட் யம்மி.. :)
கனிமொழி -----
விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்
sumi akka
wow super and tasty recipe.....
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
கனி அன்ட் சுபி
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
உருளை டிக்கி
அழகா பிரசன்ட் பண்ணிருக்கீங்க சிஸ். உருளை டிக்கி கலக்கல்.
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
மெர்சி..
வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி மெர்சி. .
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....