ஸ்பெகடி இன் டொமேட்டோ சாஸ்

தேதி: February 12, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரம்யா கார்த்திக் அவர்களின் ஸ்பெகடி இன் டொமேட்டோ சாஸ் என்கின்ற இத்தாலியன் உணவுக் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரம்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

ஸ்பெகடி - ஒரு பாக்கெட்
தக்காளி - 4
வெங்காயம் - ஒன்று
மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
பார்ஸ்லே, தைம், ரோஸ் மேரி - சிறிது
பாப்ரிகா - அரை மேசைக்கரண்டி
ஆரிகானோ - சிறிது
பட்டர் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி
வெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் - சிறிது
மொசரில்லா சீஸ் - தேவையான அளவு (துருவியது)


 

தக்காளியை வேக வைத்து தோலுரித்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு, மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பூண்டு, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கவும்
அதனுடன் பார்ஸ்லே, தைம், ரோஸ் மேரி, பாப்ரிகா, ஆரிகோனா, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து தக்காளி விழுதையும் ஊற்றி வெண்ணெய் வெளியே வரும் வரை கிளறி வதக்கவும்.
கலவை நன்கு வதங்கியதும் ஸ்பெகடியை சேர்த்து கலக்கவும்.
கடைசியாக சீஸ் துருவலை தூவி பரிமாறவும். சுவையான ஸ்பெகடி இன் டொமேட்டோ சாஸ் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவிதா மீண்டும் கிச்சன் குயின் வாழ்த்துக்கள். கலர்ஃபுல் ரெசிபி .சூப்பரா இருக்கு எல்லா குறிப்பும்

Be simple be sample

ஸ்பெகடி இன் டொமேட்டோ சாஸ் சூப்பரா இருக்கு கவிதா.. இன்றைய கிச்சன் குயின்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சூப்பருங்க... எல்லா படங்களும் பளிச்சுன்னு அழகா செய்து காட்டி இருக்கீங்க :) வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா