அப்பள வற்றல் குழம்பு

தேதி: February 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. T. S. ஜெயந்தி அவர்களின் அப்பள வற்றல் குழம்பு என்ற குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஜெயந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

உளுந்து அப்பளம் - 2 அல்லது 3
புளி - எலுமிச்சை அளவு
வெந்தயம் - கால் தேக்கரண்டி
வற்றல் குழம்பு பொடி - 3 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரிசி மாவு - 2 தேக்கரண்டி


 

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளிக்கவும்.
அதில் உளுந்து அப்பளத்தை சிறிய துண்டங்களாகப் பிய்த்துப் போட்டு பொரிக்கவும்.
அப்பளம் பொரிந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், வற்றல் குழம்பு பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.
கலவை நன்கு கொதித்தவும் அரிசி மாவைக் கரைத்து ஊற்றி மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.
கொதித்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும். சுவையான அப்பள வற்றல் குழம்பு தயார்.

வற்றல் குழம்பு பொடி செய்ய : <a href="/tamil/node/10689"> வற்றல் குழம்பு பொடி </a>


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அப்பள வற்றல் குழம்பு வெகு ஜோர் ரேவ்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....