தந்தூரி சிக்கன்

தேதி: February 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

கோழி - அரை கிலோ
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
வெண்ணெய் - சிறிது
தயிர் - 2 மேசைக்கரண்டி
ஃப்ரஷ் க்ரீம் - 50 கிராம்
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
சிவப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை


 

கோழியினை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொண்டு ஒவ்வொரு துண்டின் சதைப் பகுதியிலும் கத்தியால் ஆழமாக இரண்டு அல்லது மூன்று இடங்களில் கீறி விடவும்.
மிளகாய்த் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து மையாக கரைத்து கோழித்துண்டுகளின் மீது பூசி 20 நிமிடங்கள் ஊற விடவும்.
தயிரை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் க்ரீம், இஞ்சி, பூண்டு விழுது, சீரகத் தூள், கரம் மசாலாத் தூள், கலர் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கோழித் துண்டுகள் மீது பூசவும். மசாலா கலவை பூசப்பட்ட கோழித் துண்டுகளை சுமார் 4 மணி நேரங்கள் ஊற வைக்கவும்.
அதன் பிறகு ஊறிய கோழித் துண்டுகளை எடுத்து க்ரில் கம்பியில் வைத்து, முற்சூடு செய்த அவனில் 350 டிகிரி F ல் சுமார் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். தந்தூரி அடுப்பில் செய்வதாக இருந்தால் 8 நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது.
சுவையான க்ரில்டு தந்தூரி சிக்கன் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் ரேவ். தந்தூரி சிக்கன் சூப்பர்மா

Be simple be sample

ஹாய் ரேவதி.P, தந்தூரி சிக்கன் படங்களே டேஸ்ட சொல்லுது. குறிப்பு எளிமை, படங்கள் சூப்பர்.குறிப்புக்கு நன்றி

உன்னை போல் பிறரை நேசி.

வாழ்த்துக்கள் கிட்சன் குயின் ரேவ்'ஸ். எத்தன‌ தடவ‌? சான்ஸே இல்ல‌. சூப்பரா கலக்கறீங்க‌. எல்லாமே அருமையா இருக்கு.

எல்லாம் சில‌ காலம்.....

ரேவ்ஸ் அசத்துரீங்க எல்லாமெ அமர்க்களமாயிருக்கு சுத்தி போடுங்க உங்களுக்கு. இன்னும் நிறைய செய்ய என் வாழ்த்துக்கள்

தந்தூரி சிக்கன் சூப்பர் & ஈஸி ரெசிபி.. :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

க்ரில்டு தந்தூரி சிக்கன் சூப்பர்.வாழ்த்துக்கள் கிச்சன் குயின்..

ஆஹா சூப்பரப்பு பார்க்கவே சாப்பிடனும்னு தோனுது :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

இன்று இந்த குறிப்பை ட்ரை செய்தேன்.. ரொம்பவும் நன்றாக வந்தது.. நன்றி சிஸ்டர்.. மைக்ரோவேவில் செய்தால் நேரமெடுக்கும் என OTG ஓவனில் செய்தேன்.. அப்படியும் அரை மணி நேரம் ஆனது.. :-)

அவந்திகா