மெக்சிகன் ரைஸ்

தேதி: February 13, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

திருமதி. ரேணுகா அவர்கள் வழங்கியுள்ள மெக்சிகன் ரைஸ் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரேணுகா அவர்களுக்கு நன்றிகள்.

 

முட்டைக்கோஸ் - 50 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
குடைமிளகாய் - ஒன்று
பூண்டு - 2 பல்
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
அரிசி - ஒரு கப்


 

முட்டைக்கோஸை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். ஒரு வெங்காயத்தை நீளமாகவும், மற்றொரு வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். பூண்டு, தக்காளி இவற்றை பொடியாகவும், குடைமிளகாயை நீளமாகவும் நறுக்கவும்.
பானில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டை போட்டு நன்கு வதக்கவும். நிறம் மாறியதும் அதை எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் போட்டு அதனுடன் அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆன் செய்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பானில் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதங்கி நிறம் மாறியதும் எடுத்து வைக்கவும்.
அதே பானில் மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டைக்கோஸை போட்டு வதக்கி எடுக்கவும்.
மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்காளி மற்றும் குடைமிளகாய் சேர்த்து மிளகாய்த் தூள், உப்பு போட்டு லேசாக தண்ணீர் தெளித்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
காய் வதங்கியதும் இறக்கி வதக்கிய வெங்காயம், கோஸ், சாதம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கிளறி பரிமாறவும்.

இதை குக்கரில் செய்யும் போது ஒரு தேக்கரண்டி எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்கி, அரிசிக்கு ஏற்ற தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிரமாதம் போங்கோ ;) வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லாமே அருமை. வாழ்த்துக்கள் கிட்சன் குயின். கலக்கலா செய்து இருக்கீங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

குறிப்புகள் அனைத்தும் அருமை. வழக்கம் போல‌ படங்கள் சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....