வயித்தில் வலி

எனக்கு இது5 மாதம் வயித்தில் வலி இருக்கு டாக்டரிடம் சொன்னதுக்கு மாதிரMefacid spas tablet தந்தங்க சாப்பிடலாமா

அந்த டாக்டர்ல & அவர் கொடுத்த மருந்துல நம்பிக்கை இல்லாட்டா இன்னொரு டாக்டர்ட்ட போகணும். அதை விட்டுட்டு டாக்டரில்லாதவங்கள்ட்ட அபிப்பிராயம் கேட்டு சிகிச்சையைத் தாமதிக்கப்படாது.

டாக்டரை நம்பல; எங்களை மட்டும் எப்பிடி நம்புவீங்க!! :-)

‍- இமா க்றிஸ்

Dear ஆயிஷா, தோழி இமா குறிப்பிட்டதுபோல் மாத்திரையை பற்றி தெரிய‌ வாய்பில்லை.மருத்துவர் தவிர‌ மற்றவர் கூற‌ அனுமதியும் இல்லை.இந்த‌ மாதிரி டைமில் அப்படிதான் இருக்கும்.உப்பு,காரம் குறைத்தால் வலி குறைய‌ வாய்ப்புண்டு.பழங்கள் எடுத்துக்கொள்ளவும்(பலா,கருப்பு திராட்சை தவிர‌) வலி அதிகமாக‌ தெரிந்தால் மருத்துவரிடம் செல்லவும்.கவலை வேண்டாம்.

ஹாய் தோழிகளே என்று எனக்கு எட்டாவது மாதம் தொடக்கம் டாக்டர் எல்லாமே நன்றாக இருப்பதாக சொன்னார் நன்றாக ரெஸ்ட் எடுக்க சொன்னார் நான் எதாவது வேலை செய்து கொண்டு இருக்கலாமா அதாவது கொஞ்சம் நடப்பது சமையல் செய்வது போன்று

தாராளமாகச் செய்யலாம். ரெஸ்ட் என்பது முழுநாளும் எதுவும் செய்யாமல் இருப்பதல்ல. களைக்காத வரை, பாரமான வேலைகளாக இல்லாதவரை எந்த வேலையும் செய்யலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்