கிம் சீ (kim chee)

தேதி: February 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

கோவா - ஒரு கிலோ
கறி உப்பு - 3 மேசைக்கரண்டி
வெங்காயத்தாள் - ஒரு சிறு கட்டு
இஞ்சி (மசித்தது) - ஒரு மேசைக்கரண்டி
நருவல் மிளகாய்த் தூள் - ஒரு மேசைக்கரண்டி
சீனி - ஒரு தேக்கரண்டி
நீர் - 6 கோப்பை


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
கோவாவை ஒரு அங்குல நீளக் குற்றிகளாக வெட்டி, தட்டையான பாத்திரம் ஒன்றில் போடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கோவா இருக்கும் பாத்திரத்தில் உப்பு நீர் முழுவதையும் ஊற்றவும்.
அதன் மேல் ஒரு தட்டைப் போட்டு மூடி, பாரம் வைத்து இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள் நீரை வடித்து எடுக்கவும். (நீரைத் தனியாகச் சேமித்து வைக்கவும்.)
வெங்காயத் தாளை நீளமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
இஞ்சியை மசித்து வைத்துக் கொள்ளவும்.
கோவாத் துண்டுகளோடு மீதி அனைத்தையும் சேர்த்துக் கலக்கவும்.
சுத்தமான கண்ணாடிச் சாடியில் போட்டு, சேமித்து வைத்துள்ள உப்பு நீரால் மீதிச் சாடியை நிரப்பி மூடி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

நான்கைந்து நாட்களில் ‘கிம் சீ’ பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கும். இது வாரக்கணக்கில் கெடாமல் இருக்கும்.

தென் கொரியர்களின் உணவான கிம் சீ பல்வேறு விதங்களில், பல்வேறு உணவுப் பொருட்களையும் கொண்டு தயாரிக்கப்படுகிறது. அவர்களது ‘ஊறுகாய்’ முறை இது எனலாம். முன்பெல்லாம் இப்படி கிம் சீ தயாரித்து பெரிய சாடிகளில் நிலத்தின் கீழ் புதைத்து வைப்பார்களாம். இப்போது குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கிறார்கள். கிம் சீயை இப்படியே ஒரு பக்க உணவாகக் கொள்ளலாம்; அல்லது வேறு உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கும் போது சுவைக்காகச் சிறிது சேர்க்கவும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிம் சீ பெயர் புதுசா இருக்கே.. செய்முறையும் சூப்பரா இருக்கு. சகலகலா வள்ளி சூப்பர் அம்மா..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

:-) இது பழைய குறிப்பு. இப்போ மீண்டும் படத்தோடு வந்திருக்கிறது.

‍- இமா க்றிஸ்

பார்க்கவே நல்லாருக்கு. ஜாடியும் அழகு.

Be simple be sample

கிம் சீ கடையில் வாங்கி சாப்ட்டு இருக்கேன்.. எளிமையான‌ செய்முறையுடன் படங்களும் அருமை..

"எல்லாம் நன்மைக்கே"

இம்மாம்மா கேள்வி பட்டதே இல்லைங்கம்மா இப்படி ஒரு பெயரை புதுமையா இருக்கு எனக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.