தக்காளி கறி

தேதி: February 14, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

சிக்கன் - அரைக் கிலோ
வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3
முந்திரி - 20
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
வெண்ணெய் - 3 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 3
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஃப்ரஷ் க்ரீம் - 3 தேக்கரண்டி
கஸ்தூரி மேத்தி - அரை தேக்கரண்டி


 

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து அதில் தக்காளியை போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்து மேல் தோலை நீக்கி விட்டு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். முந்திரியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
பின்னர் அதில் அரைத்த முந்திரியை சேர்த்து கிளறவும்.
இந்த தக்காளி கலவையில், கொடுக்கப்பட்டுள்ள தூள் வகைகள் எல்லாவற்றிலிருந்தும் பாதி அளவை எடுத்து சேர்த்துக் கொள்ளவும். சிறிது தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
மற்றொரு வாணலியில் வெண்ணெய் போட்டு உருகியதும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சிக்கன் சேர்த்து வதக்கி விட்டு மீதமிருக்கும் தூள் வகைகளை சேர்த்து நன்கு பிரட்டி விட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
சிக்கன் வெந்ததும் தயார் செய்து வைத்துள்ள தக்காளி மசாலாவை சேர்த்து நன்றாக கிளறி விட்டு சிறிது நேரம் வேக விடவும்
கலவை கொதித்து சற்று திக்கானதும் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து, கஸ்தூரி மேத்தி தூவி இறக்கவும்.
சுவையான தக்காளி கறி தயார். இது சப்பாத்தி, நாண், கீ ரைஸுடன் சாப்பிட ஏற்ற சைட்டிஷ்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

என்னம்மா இரண்டு பேரும் சேர்ந்து படம் காட்டுறீங்க.. ம்ம் கலக்குங்க. சூப்பர் ரேவா படங்கள் அனைத்தும் கலர்ஃபுல்.. கலக்குமா கண்ணு..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

தக்காளி கறி கிரேவியுடன் ரொம்ப‌ நல்லா வந்திருக்கு... கலக்கல்

"எல்லாம் நன்மைக்கே"

ரேவ்ஸ் செமயா இருக்கும் போலருக்கே கலர்ஃபுல்லா இருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் & டீம். நன்றி

Be simple be sample

தான்க்யூ ரேவ்.

பாக்யா தான்க்யூ செல்லம்.

சுவா செம டேஸ்ட்டா இருக்கும் செய்து பாருங்க. தான்க்யூ

Be simple be sample