புளி மிளகாய்

தேதி: February 16, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

திருமதி. சீதாலெட்சுமி அவர்களின் புளி மிளகாய் என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சீதாலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.

 

புதுப்புளி - 100 கிராம் (அல்லது ஒரு சிறிய ஆரஞ்சுப் பழ அளவு)
பச்சை மிளகாய் - 15
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
தாளிக்க :
கடுகு


 

புளியை கெட்டியாகக் கரைத்து உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். பச்சை மிளகாயை லேசாகக் கீறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். அதில் பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.
பச்சை மிளகாயுடன் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றி மூடி, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
கலவை கொதித்து கெட்டியாக துவையல் பதத்திற்கு வந்ததும் இறக்கி, ஆற வைக்கவும்.
சுவையான புளி மிளகாய் தயார். சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என்று எல்லாவற்றிற்கும் பொருத்தமான சைட் டிஷ் இது. ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்