தேதி: February 17, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கோமு அவர்களின் எலுமிச்சம்பழத் தொக்கு என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கோமு அவர்களுக்கு நன்றிகள்.
பழுத்த எலுமிச்சம் பழங்கள் - 25
மிளகாய் வற்றல் - 200 கிராம் (பொடித்துக் கொள்ளவும்)
நல்லெண்ணெய் - 200 மி.லி
பெருங்காயம் - 5 கிராம்
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
வெந்தயத் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சம் பழங்களை நான்காக நறுக்கி அதில் உள்ள விதைகளை நீக்கி விட்டு ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு உப்பு சேர்த்து குலுக்கி வெள்ளைத்துணியால் பாட்டிலின் வாயை மூடி 10 தினங்களுக்கு கட்டி வைக்கவும் இப்போது பழம் உப்பு சேர்ந்து பதமாக இருக்கும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்.

அதனுடன் வெந்தயத் தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், பொடித்த மிளகாய் வற்றல் போட்டு வதக்கி அதில் உப்பில் ஊறி பதமாக இருக்கும் எலுமிச்சம் பழங்களையும் போட்டு மத்தால் நன்கு மசித்து கிளறவும்.

தொக்கு சட்டியில் ஒட்டாமல் திரண்டு வந்ததும் கீழே இறக்கி ஆற வைத்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.

Comments
சுவர்ணா அக்கா
எழுமிச்சம்பழத் தொக்கு சோ டெம்ப்டிங் டிஷ் .. சூப்பரோ சூப்பர் :) அப்படியே இங்க அனுப்பிடுங்க :)
சுவா
:P :P :P சுவா வெறும் தொக்கு மட்டும் கொடுத்தா எப்படி சாதத்தோடு கலந்து கொடும்மா ரொம்ப பசிக்குது.. கடைசிபடம் அள்ளுது.. அனைத்து படங்களும் சூப்பர்.. வாழ்த்துகள் சமையல் ராணி அவர்களே!!
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
சுவா
ஆமாம் இந்த தொக்கை என்ன பண்றது? ஊறுகாய் மாதிரியா? இல்ல வேற பர்பஸா? சூப்பரா இருக்கு கடைசி படம் பார்க்க.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
அனு
அனு அம்புட்டுதானே அனுப்பி வச்சிட்டா போச்சு ;) மிக்க நன்றி
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
ரேவ்
ரே இங்க வா ரெண்டும் சேத்து செய்து தரேன் :) மிக்க நன்றிம்மா.
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வனி
வனி இது ஊறுகாய் மாதிரியேதான் சந்தேகமே வேண்டாம் ரசம் சாதம் தையிர் சாதம் எல்லாத்துக்கும் தொட்டுக்கலாம் மிக்க நன்றி :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
நன்றி
காரசாமான சுவையான குறிப்பை கொடுத்த திருமதி. கோமு அவர்களுக்கு மிக்க நன்றி :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.