ஆட்டு எலும்பு சூப்

தேதி: February 17, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. கரோலின் இம்மானுவேல் அவர்களின் ஆட்டு எலும்பு சூப் குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கரோலின் அவர்களுக்கு நன்றிகள்.

 

ஆட்டு எலும்பு - கால் கிலோ
வெங்காயம் - 2
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கிராம்பு - 6
பட்டை - 2 துண்டுகள்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். மிளகை உடைத்து வைக்கவும். ஆட்டு எலும்பினை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அரை லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
அதனுடன் நறுக்கிய வெங்காயம், உடைத்த மிளகு, மஞ்சள் தூள் ஆகியவற்றையும் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து எலும்பில் உள்ள சாறு நீரில் இறங்கி எண்ணெய் போல் மிதக்கும் நேரத்தில் பாத்திரத்தை இறக்கி விடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை மற்றும் கிராம்பை தட்டிப் போடவும். அவை சிவந்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து எலும்பு நீரை அதில் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சிறிது நேரம் மூடி வைத்து விடவும்.
சூப் சிறிது நேரம் கொதித்ததும் இறக்கி சூடாக பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆட்டுகால் சூப் சூப்பர் அம்மிணி.. கலக்குங்க கலக்குங்க.. கடைசி படம் அந்த பவுல் அண்டு தட்டோடு எஸ்ஸாவுறேன்.. கலக்கல் ரெசிபி..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஆட்டு எலும்பு சூப் ஹெல்தி அன்ட் சூப்பர் ரெசிபி :)

சுவையான சத்தான சூப் குறிப்பை கொடுத்த திருமதி. கரோலின் இம்மானுவேல் அவர்களூக்கு மிக்க நன்றி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரே மிக்க நன்றி ம்ம் ஆட்டைய போடுரதுலயே இருக்குது இந்த பொண்ணு ;)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மிக்க நன்றி அனு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஆட்டு எலும்பு சூப் சூப்பர் ரெசிபி :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்