பொருட்களை மீண்டும் உபயோகப்படுத்த

தூக்கியெறியும் பொருட்களை வீணாக்காமல் மீண்டும் உபயோகப்படுத்த ஏதேனும் யோசனை (ஐடியா) சொல்லுங்கள். (உதாரணமாக Baby Food Jarகளில் Spicy Items, Buttons இது போன்று வைத்துக்கொள்வது)

குளிர்பான பாட்டில்களை பாதியாக வெட்டி ஒரு பகுதியை சேமிப்பு கலனாகவும் மற்றொரு பகுதியை வடிப்பானாகவும்(funnel) உபயோகிக்கலாம்.

--Chandru

******அன்பே சிவம்******

நன்றி Chandru Sir.

தூக்கியெறியும் பொருட்களை பயன்படுத்துதல்

ஷர்ட்களுக்கு பேக் செய்து தரப்படும் அட்டைகளை பீரோவில் விரித்து துணிகளை அதன் மேல் அடுக்கலாம்.

கிருஷ்ணா ஸ்வீட் போன்ற கடைகளில் கொடுக்கப்படும் பாக்ஸ்களை எல்லோரும் பயன்படுதுவார்கள். ஆனாலும் அதை பண்டிகை சமயத்தில் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு பதார்த்தம் போட்டு கொடுக்க பயன்படுத்தலாம். திருப்பி வாங்க தேவையில்லை.மற்றும் சாப்பாடு கேட்டு நம் விட்டு கதவைத் தட்டும் ஏழை மற்றும் வயதானவர்களுக்கு ஒரு பாலி கவரில் போட்டு கொடுப்பதை விட இதில் போட்டு கொடுத்தால் அவர்களும் சந்தோசம் அடைவார்கள்.

இன்னும் நமது அனுபவமுள்ள அறுசுவை தோழிகள் கூறுவார்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் பஹ்ரைன் வாசி என் கணவர் ஒருவர் மட்டுமே வேலைக்கு செல்கிறார்.எனக்கு கொஞ்சம் கைவேலை தெரியும் எனக்கு
வழி சொல்லுங்கள் எனக்கு 1 பெண் உண்டு நான் இப்பொழுது 7 மாதம்
குட்டிறேயமா

பழையபுடவையை இருக்கி பின்னல் போல செய்து உங்கள் விருப்பத்திற்கேப வடிவங்களில் மிதியடியாக பயன்படுத்தலாம். பயன்படுத்தி முடித்த சுடிதாரில் துப்பட்டா நல்ல நிலையில் இருந்தால் அலமாரி, ஜன்னல்களுக்கு திரைசீலையாக பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் ஸ்வீட் பாக்ஸை தூக்கியெறியாமல் அவற்றில் பச்சை மிளகாய், புதினா, கருவேப்பில்லை, கொத்துமல்லி போன்றவற்றை போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நைட்டிகள் அதிகமாக உபயோகிக்கிறோம். அதிகமாக வாங்குவதும் அதை தான். பழசானால் அதை குப்பையில் போடுவதற்கு பதிலாக தையல் பிரித்து அதை நாலாக மடித்து சுற்றியும் தையல் போடவும். ஓரங்களில் காண்ட்ரஸ்ட் கலர் கரை கொடுத்து அடிக்கவும். இதை மிதியடியாக பயன்படுத்தலாம். பெரும்பாலும் காட்டனாக இருப்பதால் ஈரத்தை உறிஞ்சிவிடும்.

டெலி போன் கீழ் வைக்கலாம். டீவியின் மேல்,ஒவ்வொறு வீட்டு உபயோக பொருட்களுக்கு மேலும்,கீழும் கூட போடலாம். பார்க்க அழகாக இருக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

அட்டைப் பெட்டிகள், சட்டைகளின் உள்ளே இருக்கும் லேசான அட்டைகளை, எண்ணெய் பாட்டில்கள் வைக்கும் டிரேயின் அடியில் வைக்கலாம்.

பழைய காட்டன் நைட்டிகள், தலையணை உறைகள் போன்றவை,(மற்றவர்களுக்கு கொடுக்க முடியாதபடி கிழிந்திருந்தால்) சுத்தமாக துவைத்து, பிறகு, சீராக கட் செய்து வைத்துக் கொண்டால், அடுப்படியில் கைபிடி டவலாக உபயோகிக்க, அப்பப்போ அடுக்களை மேடையை கிளீன் செய்துவிட்டு, தூக்கிப்போட்டு விட, உபயோகிக்கலாம்.

பாக்கிங் செய்து வரும் நெட்டி டப்பாக்கள், பழங்களின் மேல் பாக் செய்து வரும் வலைத்துணிகள், எல்லாம் ஒரே இடத்தில் வைத்திருந்தால், குழந்தைகளுக்கு ப்ரொஜெக்ட் செய்ய, நம் கற்பனைத் திறனுக்கேற்றவாறு பயன் படுத்தலாம்.

நமது கைவினை பகுதியில், பழைய வாரப் பத்திரிக்கைகளைப் பயன்படுத்தி செய்த வீடு போன்ற அழகிய வேலைப்பாடு பார்த்த நினைவு. பேப்பர் ஸ்டிக்ஸ் செய்து அதிலும் ஒரு வேலைப்பாடு செய்திருந்தார்கள்.

அட்டைகள் கொண்டு செய்த அழகிய வால் ஹாங்கிங் – மஹிஸ்ரீ
காகிதத்தில் வாத்து வடிவம் – செபா
சன்ஃப்ளவர் சிடி அலங்காரம் – செண்பகா பாபு
பழைய புடவைகளைக் கொண்டு அழகிய மிதியடி செய்வது – அறுசுவை டீம்
பேப்பர் பூ ஜாடி – ரேணுகா

இன்னும் நிறைய இருக்கு அதில. கற்பனைத் திறன் உள்ளவர்கள் அவங்களே இன்னும் டெவலப் செய்து நிறைய செய்ய முடியும்னு நினைக்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

பவுடர் டப்பா காலியாகிவிட்டால் அதை பாதியளவு நறுக்கி பெயின்ட் அடித்து அல்லது எம்சிலில் வேண்டிய வடிவம் செய்து பென்ஸ்டாண்டாக உபயோகிக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

காலியான பவுடர் டப்பாக்களை பிரித்தெடுத்து சிறு சிறு முறங்கள் செய்யலாம். இந்த முறத்தை சமையலறை சிங்க் பக்கத்தில் வைத்தால் பாத்திரம் கழுவியவுடன் விழும் சமையல் கழிவுகளை அகற்ற காம்பேக்டாக இருக்கும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இங்கு நல்ல யோசனைகள் எல்லாம் வருகிறதே. ;)

எனக்குத் தான் சிலது புரியவில்லை.

கல்பனா, ஒரு முறை செய்முறை விளக்கம், படத்தோடு 'நீங்களும் செய்யலாம்' பகுதிக்கு அனுப்பி வைப்பீர்களானால் பலருக்கும் உதவியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்