சரவணபவன் ஹோட்டல் சாம்பார்

தேதி: February 18, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. பீவி அவர்களின் இந்த சரவணபவன் ஹோட்டல் சாம்பார் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பீவி அவர்களுக்கு நன்றிகள்.

 

துவரம்பருப்பு - கால் கப்
கத்தரிக்காய் - ஒன்று
முருங்கைக்காய் - ஒன்று
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
புளி - சிறிய எழுமிச்சை அளவு
அரைப்பதற்கு:
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று (பெரியது)
தேங்காய் - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - 4 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - கால் தேக்கரண்டி
வற்றல் மிளகாய் - ஒன்று
கறிவேப்பிலை, மல்லித் தழை - தேவையான அளவு


 

மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு நைசாக அரைத்து எடுக்கவும். புளியுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும். குக்கரில் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
வேக வைத்த பருப்புடன் மேலும் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி நறுக்கிய காய்கறிகள், பச்சை மிளகாய், தக்காளி, பாதி வெங்காயம் போட்டு உப்பு சேர்த்து வேக விடவும்.
அரைத்த விழுது மற்றும் புளிக்கரைசலை வெந்த பருப்பு காய்க் கலவையில் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து பெருங்காயம், கிள்ளிய வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
சாம்பரை அதில் ஊற்றி மல்லித் தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான ஹோட்டல் சாம்பார் தயார். இந்த சாம்பார் இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற சிற்றுண்டிகளுக்கு நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சரவண பவன் சாம்பார் இல்லைங்கோ ரேவதி சாம்பார்ங்கோ.. இங்கவரைக்கும் மணம் வீசுது ரேவா.. சூப்பர்.. வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

சரவணபவன் ஹோட்டல் சாம்பார் நல்ல‌ குறிப்பு ஈசியா செய்முறைல‌ சூப்பர் டிஷ் அக்கா :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

சரவண‌ பவன் சாம்பார் எனக்கு ரொம்ப‌ பிடிக்கும். ஆனால் செய்முறை தெரியாமல் இருந்தேன். நீங்க‌ சூப்பரா செய்து இருக்கீங்க‌. எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு. நாளைக்கு இந்த‌ சாம்பார் தான் என் வீட்டில். வாழ்த்துக்கள் கிட்சன் குயின்.

எல்லாம் சில‌ காலம்.....

ரேவ் தான்க்யூ.நல்லாருக்கும் செய்துபாருங்க.

கனி தான்க்யூ

பாலா செய்துவிட்டு நாளைக்கு மறக்காமல் சொல்லுங்கள். தான்க்யூ

Be simple be sample