தேதி: February 18, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
திருமதி. கெளரிசுரேஷ் அவர்களின் சூஜி ஷீரா குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கெளரிசுரேஷ் அவர்களுக்கு நன்றிகள்.
ரவை - ஒரு கப்
நெய் - ஒரு கப்
முந்திரி - 7
பால் - 2 1/2 கப்
சர்க்கரை - 2 கப்
ரவையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

பாலை காய்ச்சி அதனுடன் சக்கரையை கலந்து வைக்கவும்

அடிகனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரியை வறுக்கவும்.

அதனுடன் சுத்தம் செய்த ரவையை சேர்த்து சிவக்க வறுக்கவும்.

ரவையுடன் சர்க்கரை கலந்து வைத்திருக்கும் பாலை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும்

ரவை பால் கலவை கெட்டியாகி அல்வா போல் திரண்டு வரும் பதத்தில் இறக்கவும்.

சுவையான சூஜி ஷீரா தயார்.

Comments
கிச்சன் குயின்
சூஜி ஜீரா புது புது பெயரா இருக்குங்க. என்னனென்னமோ செய்து கலக்குறீங்க போங்க.. சூப்பர் ரேவ்.. புது மொபைல் வாங்கியாச்சு வித விதமா போட்டோ போட்டு கலங்குங்க அம்மிணி.. கிச்சன் குயின் ஒரு ஓஓஓஓ..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவ்
வாழ்த்துக்கள் கிச்சன் குயின். கலக்கல் ரெசிப்பீஸ். படங்களும் அழகு. பாராட்டுக்கள்...:)
விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....
hi kitchen queen
Receipes are looking good.oru sweet panirukingale athu today eve try panitu epdi irunthathunu solren.vaalthukal......
hi kitchen queen
Receipes are looking good.oru sweet panirukingale athu today eve try panitu epdi irunthathunu solren.vaalthukal......
ரேவ்
பார்க்கவே யம்மியா இருக்கு.. கிச்சன் குயின்க்கு வாழ்த்துகள்:)
"எல்லாம் நன்மைக்கே"
ரேவ்ஸ்
வித்யாசமான பெயரில் ஒரு இனிப்பு கலக்குங்க :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
தோழிஸ்
நன்றி தோழிஸ்
Be simple be sample