கிட்னியில் கல் உதவி தேவை ப்ளிஸ்

என் கணவருக்கு கிட்னியில் கல் உள்ளது டாக்டர் லேப்ரோஸ்கேப்பி பண்ண சொல்லி இருக்கறாத சொல்லறாங்க.கிட்னியில் ஒர் கல் இருந்தல் கூட லேப்ரோஸ்கேப்பி செய்ய வேண்டுமா????நான் வேண்டாம் என்று சொல்லுகிறேன்.இன்னும் ஒர் டாக்டர் பாக்க்கலாம் என்பது என் விருப்பம்...என் மாமியார் உனக்கு இது பத்தி எதும் தெரியாது உன் வேலை என்னவோ அதை மட்டும் பார் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று கூறி விட்டர்...இதை பற்றி தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள் ப்ளிஸ்...

//என் கணவருக்கு கிட்னியில் கல் உள்ளது டாக்டர் லேப்ரோஸ்கேப்பி பண்ண சொல்லி இருக்கறாத சொல்லறாங்க.// யார் சொன்னாங்க? கணவரா? அவர் மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு! யாராச்சும் இல்லாததுக்கு ஆப்பரேஷன் அது இதுன்னு போவாங்கன்னு நினைக்கிறீங்களா? செலவு, உடம்பு இன்னும் கொஞ்சம் முடியாம போய்த்தான் சுகமாகும், வேலைக்கு லீவு போடணும், . இப்படியெல்லாம் இருக்க ஜாலியா இருக்குன்னு பண்ண மாட்டாங்க யாரும்.

//கிட்னியில் ஒர் கல் இருந்தல் கூட லேப்ரோஸ்கேப்பி செய்ய வேண்டுமா????// இது என்ன கேள்வி! உங்கள் கணவர், உங்களுக்கு அக்கறை இருந்தால் இன்னும் கொஞ்சம் விபரமா கேட்டிருப்பீங்க. எண்ணிக்கையை மட்டும் பார்க்கிறீர்கள் நீங்கள். அளவு எப்படி இருக்கிறதோ! சின்னதாக இருந்தாலும் கல் எங்கே அமைந்திருக்கிறது, உராய்வினால் அந்த இடத்தில் இன்பெக்ஷன் ஆகி இருக்கா என்பதெல்லாம் பார்த்துத்தான் சர்ஜரி என்று சொல்லியிருப்பார்கள்.

ஒரு விஷயம் சொல்லத் தோணுது. உங்க கணவருக்கு கிட்னில கல்லு என்று மாஜிக்ல யாரும் சொல்லல. அவங்க ஏதோ வலியோ வேதனையோ ஒரு கம்ப்ளைண்ட் சொல்லியிருப்பாங்க டாக்டர்ட்ட. அவங்களால முடியாம இருந்ததால தான் இந்த விஷயம் தெரியவே வந்திருக்கு. அப்படி இருக்க, வலியைத் தொடர்ந்து அனுபவிச்சுட்டே இருக்கணும் அவங்க என்று நீங்க நினைக்கிறது நியாயம் இல்லை சகோதரி.

//கிட்னியில் ஒர் கல் இருந்தல் கூட லேப்ரோஸ்கேப்பி செய்ய வேண்டுமா????// கல் இல்லாம இருக்கிறதுதான் நார்மல் என்று உங்களுக்குத் தெரியும். பிறகு ஒன்று என்றால் என்ன ஒன்பது என்றால் என்ன! செய்யாமல் விட்டால் என்ன என்று டாக்டரிடம் கேட்டுப் பாருங்கள். :-)

//இன்னும் ஒர் டாக்டர் பாக்க்கலாம் என்பது என் விருப்பம்.// வலி அனுபவிக்கிறது நீங்க இல்ல. அனுபவிக்கிறவர் குழந்தையும் இல்ல. அவங்க விஷயம் தெரிஞ்சுதான் போறாங்கன்னு நினைக்கிறேன். யாரும் ஒண்ணுமில்லாததுக்கு சர்ஜரின்னு போய் வேதனையை விலைக்கு வாங்க நினைப்பாங்களா? விடுங்க. உங்களுக்கு வரப்ப நிச்சயம் உங்க விருப்பப்படிதான் அவங்க நடக்கணும். இது அவங்க உடம்பு, அவங்க வலி. அவங்களுக்கு டாக்டர் மேல நம்பிக்கை இருக்கு. உங்களுக்கு அந்த டாக்டர் மேல நம்பிக்கை இல்லையா!

//என் மாமியார் உனக்கு இது பத்தி எதும் தெரியாது உன் வேலை என்னவோ அதை மட்டும் பார் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று கூறி விட்டர்.// ;) இதுல மாமியாரை எதுக்கு இழுக்கிறீங்க! ம்... உங்க கணவர் என் பையனா இருந்தா, நான் இதை விட அதிகமா உங்களை கோச்சுப்பேன் என்று நினைக்கிறேன். :-) அவங்க ஒண்ணும் குழந்தை இல்லை.

நான்லாம் எனக்கு சந்தேகம் வந்தப்பவே, "வேணாம், ஒண்ணும் இல்லை," என்று சொன்ன கணவரை ஆதாரம் எல்லாம் எடுத்துக் காட்டி குழப்பி, எங்க டாக்டர்ட்ட காட்டி, அவர் மூலம் ஸ்பெஷலிஸ்ட்டிடம் கூட்டிப் போய் செக் பண்ண ஆள். :-) ஒண்ணு பிரச்சினைன்னு தெரிஞ்ச பின்னால வேணாம், விஷயம் முற்றிப் போனால் பார்க்கலாம் என்று எல்லாம் சொல்ல மாட்டேன். ;(

‍- இமா க்றிஸ்

இமா அம்மா,நிங்கள் சொல்லவருவது எனக்கு புரிகிறது..நான் என் கணவரிடம் எவ்வளோ கேட்டு விட்டான் அவர் என்னிடம் சொல்ல மறுக்கிறார்..
நான் மாமியாரை இழுக்கவில்லை..மாமியார் சொன்ன விதம் என் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.நான் இந்த டாக்டரிடம் கட்டுவதற்க்கு பதிலாக அதை பற்றி தெரிந்து ஸ்பெலிஷ்ட்யிடம் காட்டலாம் என்று சொல்ல்கிறேன் அதை ஏற்க மறுகிறார்கள்.அது தான் எனக்கு கவலையாக உள்ளது..ஸ்கேன் ரிப்போர்ட் கூட பாக்க விட மாட்டங்கறாங்க.

//மாமியார் சொன்ன விதம் என் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.// ம். நீங்க சொன்ன விதம் அவங்களுக்கு கஷ்டமா இருந்து இருக்கும் என்கிறதும் நல்லாவே தெரியுது. இங்க நீங்க எழுதின விதத்துல ஊகிக்கிறேன்.

//இந்த டாக்டரிடம் கட்டுவதற்க்கு பதிலாக அதை பற்றி தெரிந்து ஸ்பெலிஷ்ட்யிடம் காட்டலாம் என்று சொல்ல்கிறேன் // ஆனா ஆரம்பத்துல நீங்க போட்ட கேள்வில அந்தத் தொனி வரல. அந்தக் கேள்வி எப்படித் தொனித்ததோ அதை வைச்சு நான் பதில் சொன்னேன்.

//இந்த டாக்டரிடம் கட்டுவதற்க்கு பதிலாக அதை பற்றி தெரிந்து ஸ்பெலிஷ்ட்யிடம் காட்டலாம் என்று சொல்ல்கிறேன் // லாப்ரஸ்கோபி பண்ணத்தானா வேண்டும்? சும்மா இருந்தா என்ன? //நான் வேண்டாம் என்று சொல்லுகிறேன்.// என்கிற மாதிரித்தான் கேள்வி போட்டு இருந்தீங்க. :-) இப்போ சொன்ன மாதிரி அந்தக் கேள்வி போடல நீங்க. :-)

இந்த மாதிரி ஒண்ணை நினைச்சு ஒண்ணு சொல்லி இருப்பீங்க. மாமிக்கு துக்கம் வந்திருக்கும்.

//ஸ்கேன் ரிப்போர்ட் கூட பாக்க விட மாட்டங்கறாங்க.// அப்ப நிச்சயம் ஸ்கான் பண்ணி இருக்காங்க.

திரும்பவும் சொல்றேன். எனக்கு கல் இல்லாமலிருக்க, சும்மாவாச்சும் போய் லாப்ரஸ்கோபின்னு காசு செலவளிச்சு உடம்பை கஷ்டப்படுத்துவேனா நான்! மாட்டேன்.

அவங்க விஷயத்தோடதான் பண்றாங்க. விட்டுருங்க.

‍- இமா க்றிஸ்

தோழி உங்௧ள் ௧ணவருக்கு கல் இருப்பது எப்போது தெரிந்து கொண்டீர்௧ள் தெரிந்து கொண்ட பின்பும் அதற்கான சிகிச்சை முறை௧ள் ஏதேனும் ௧டைபிடித்தார்௧ளா

ML

இரண்டு மாதத்திற்க்கு முன்பு கண்டு பிடித்தோம்.ஹிமாலயா-வில் சிஸ்டோன் என்ற மாத்திரை போடுகிறார்..

கிட்னி ஸ்டோன் பித்தக்கல் மாதிரியானது கிடையாது. கரைப்பதற்கு, உடைப்பதற்கு எளிதானது. ஒரு கல்லுக்கு லேப்ரோஸ்கோபியா என்ற உங்களது கேள்வியில் நியாயம் இருக்கின்றது. உண்மையில் ஒரு கல்தான் இருக்கிறது என்றால் அதற்கு லேப்ரோஸ்கோபி பெரிய சிகிச்சை என்றுதான் எனக்கும் தோன்றுகின்றது. கல் அளவு என்ன, என்ன மாதிரியான பிரச்சனைகள் உள்ளது என்பது தெரியவில்லை என்பதால் இது குறித்து எதுவும் சொல்ல இயலாது.

சிலருக்கு உடல்நிலை குறைப்பாட்டால் கால்சியம் கரையாது அவை கற்களாக மாறிவிடும். என்னுடைய ஒன்று விட்ட சகோதரர்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. அவர்கள் சரி செய்ய சரி செய்ய மீண்டும் மீண்டும் கற்கள் வந்துகொண்டே இருக்கும். உணவு விசயத்தில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். அவர்களுக்கு இதுவரை லேப்ரோஸ்கோபி செய்தது கிடையாது. ஆனால் சிறு கற்கள் சிறுநீர் பாதையில் அடைத்துக்கொண்டு அவ்வபோது மரண வேதனை அனுபவிப்பார்கள். ஓரிரு முறை ureteroscopy செய்துள்ளார்கள்.

சிலருக்கு ஒரு கல் இரண்டு கல் என்று மற்ற காரணங்களுக்காக வரலாம். என்னுடைய சகோதரருக்கு இது போல் ஒரு கல் உருவாகி திடீரென ஒரு நாள் மரண வலியைக் கொடுக்க, அவர் உடனே மருத்துவரைப் பார்த்து அவர் கொடுத்த மருந்தை எடுத்துள்ளார். சில மணி நேரங்களிலேயே பிரச்சனை சரியாகிவிட்டது. பின்னர் எடுத்த ஸ்கேனில் கல் இல்லை. என்னுடைய நாலேட்ஜில், கரைக்க முடியாத அளவிற்கு நிறைய கற்கள் இருத்தல் அல்லது மிகுந்த வலி இருத்தல், இன்பெக்சன் பிரச்சனை என்று இருந்தால்தான் லேப்ரோஸ்கோபி சிகிச்சைக்கு செல்வார்கள். ஒரே ஒரு கல்லுக்கு அதைச் செய்வார்களா என்பது சந்தேகமே.

உங்கள் கணவர் உங்களிடம் ரிப்போர்ட்டையே காட்ட மாட்டேன் என்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கின்றீர்கள். அப்படிப்பட்ட கணவர் நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு அதன்படி முடிவு எடுப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. ஆகவே அவர் இஷ்டப்படி விட்டுவிடுங்கள். நமது குரல் எடுபடாத இடத்தில் நமது அமைதிதான் நன்மை தரும் செயல், அட்லீஸ்ட் நமக்கு. :-)

{ அடுத்து இங்கே ஒருவர் வந்து இதற்கு ஆயுர்வேதாவில் அல்லது சித்தாவில் சிறந்த சிகிச்சை இருக்கின்றது என்று பதில் போட வருவார். உஷார்.. :-) }

Hi divya how r u. En husband ku jan la than pa labroshcobe mula ma kale vudaithu eduthom pa 30 min than pa ithula entha payamum illa pa. Nenka ippa ithukku entha treatment eduthalum athu 3 month and 6 month than pa nalla irukkura mari irukkum apparam mit night la thirumpa pain varum pa. Thirumpa kastam than pa. So nenga pannirathu sari than pa. Nenga ethana dr. Ta katinalum irukkunu than soluvanga. Entha scan eduthalum stone acurata theriathu pa. Ippalam yarum tablet la karaipathu illa pa. Trips ethuna veli vara chance irukku but entha dr.um athukku othukka matranga pa. Nammala rompa payapata vaikuranga pa.

அட்மின் அண்ணா,எனக்கு என்ன சந்தேகம் என்றால் என் ஒரு பெரியப்பாவிற்க்கும்,அவருடைய பையன்க்கும் இருந்தது..அதே போல் என் மாமானார்க்கும்,என் கணவர் அவருடைய அண்ணாவுக்கும் இருக்கு..இது பரம்பரையாக வருமா...????எனக்கு இது பற்றி யாராவது சொல்லுங்கள்..

வாய்ப்புள்ளது.

நான் ஏற்கனவே குறிப்பிட்ட என்னுடைய உறவினர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கின்றது. பரம்பரையால் உடல் அமைப்பில் உள்ள சில குறைபாடுகளால் உண்டாகும் இந்தப் பிரச்சனை, ஒத்த அமைப்பில் உள்ள குடும்பத்தினருக்கும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். என்னுடைய உறவினர்களுக்கு ஹெரிடிட்டிதான் காரணம் என்று சொல்லப்பட்டது. அப்படி இருக்கையில் இதற்கான மூலக்காரணம் சரி செய்யப்படாத வரையில் இந்தப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கிடைக்காது. கற்கள் வருவதும், அதை நீக்குவதும், பிறகு சிறிது காலம் கழித்து மீண்டும் வருவதும் என்று தொடர்கதையாக இருக்கும். மருத்துவர்கள் கொடுக்கும் மருந்தை தொடர்ந்து எடுத்து வந்தால், அவர்கள் குறிப்பிடும் உணவு பழக்கம், மற்றப் பழக்கங்களை கடைபிடித்து வந்தால், கற்கள் மீண்டும் உருவாகாமல் தடுக்கலாம். இதைத்தான் எனது உறவினர்கள் செய்து வருகின்றனர்.

தோழி மாத்திரையின் மூலம் குணபடுத்த இயலாத காரணத்தினாலயே உங்௧ள் கணவருக்கு லேப்ராஸ்கோபி எனும் முறையை பின்பற்ற மருத்துவர் கூறி இருக்௧லாம் என நினைக்கிறேன்

சிறுநீரக கல்லை வெளியேற்ற மருந்து மாத்திரை தருவார்௧ள்
சில உணவு முறை௧ளையும் பின்பற்ற சொல்வார்௧ள்
உ,தா:::: நிறைய நீர் அருந்த சொல்லுதல் ,, வாழைத்தண்டு மூலம் செய்யக்கூடிய உணவினை சாப்பிடச்சொல்லுதல்

இவற்றை சில நாட்௧ள் சாப்பிட சொல்வார்௧ள்
இவற்றை முறையாக கடைபிடித்து நாம் சாப்பிட்டு வந்தாலும் கூட சிலநாட்௧ள் ௧ழித்து மருத்துவரை சந்திக்கும் போது முன்பு போல் தான் இருக்கிறது மாற்றம் ஏதும் இல்லை வலி அதிகமாக இருக்கிறது சிறுநீர் முன்பு போல் செல்ல இயலவில்லை கஷ்டமாக இருக்கிறது என்று கூறுவார்௧ளேயானால் மருத்துவர்௧ள் அதற்கு தகுந்தார் போல் சிகிச்சையை மேற்கொள்வார்௧ள்

அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்௧ள் கூறினார்௧ள் என்றால் நல்லதுக்கா௧ தான் என்று நம்புங்௧ள் தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்யமாட்டார்௧ள்

உங்௧ள் ௧ணவருக்கு சிறுநீரக கல் ஒன்று தான் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்௧ள் ஒரு கல் இருந்தாலும் சரி பல கல் இருந்தாலும் சரி அதுபடுத்தும் பாடு விளைவுகள் வலி எல்லாம் உங்௧ள் ௧ணவருக்கு மட்டுமே தெரியும்

வேற ஒரு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறலாம் என நினைக்கிறீர்௧ள் தப்பில்லை குடும்பத்தினருடன் ௧லந்து ஆலோசித்து முடிவெடுங்௧ள்

மருத்துவரின் ஆலோசனை படி நடந்து கொள்ளவும்

ML

மேலும் சில பதிவுகள்