கிட்னியில் கல் உதவி தேவை ப்ளிஸ்

என் கணவருக்கு கிட்னியில் கல் உள்ளது டாக்டர் லேப்ரோஸ்கேப்பி பண்ண சொல்லி இருக்கறாத சொல்லறாங்க.கிட்னியில் ஒர் கல் இருந்தல் கூட லேப்ரோஸ்கேப்பி செய்ய வேண்டுமா????நான் வேண்டாம் என்று சொல்லுகிறேன்.இன்னும் ஒர் டாக்டர் பாக்க்கலாம் என்பது என் விருப்பம்...என் மாமியார் உனக்கு இது பத்தி எதும் தெரியாது உன் வேலை என்னவோ அதை மட்டும் பார் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று கூறி விட்டர்...இதை பற்றி தெரிந்தவர்கள் பதில் கூறுங்கள் ப்ளிஸ்...

கல் சரி செய்த பிறகும் வருமா????
நான் உணவு முறையில் மாற்றி அமைத்தேன் ஆனால் அது எதும் பிடிக்கவில்லை என்று வீட்டில் சாப்பிடமால் ஆபீஸ் கேன்டின்லில் சாப்பிடுகிறார்..தண்ணீர் அருந்த சொன்னால் நான் எதோ விஷம் குடிக்க சொல்லுவது போல் பார்க்கிறார்..
மாத்திரையே சரியாக சாப்பிடுவதில்லை.மாத்திரை சாப்பிட சொன்னால் என்னுடன் சண்டை போட ஆரம்பித்து விடுகிறார்..தினமும் சண்டையிட்ட மாத்திரை போடுகிறார்..

கிட்னி கல் பற்றி எனக்கு ரொம்ப தெரியாது
ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்
நல்லதை ஛சொன்னால் ஏற்றுக்கொள்ளுங்௧ள்

உங்௧ள் ௟௧ணவர் இப்போது எப்படி இருக்கிறார்

ML

இப்போது நன்றாக இருக்கிறார்...இப்போ வரைக்கும் வலி எதும் வரவில்லை என்று சொன்னார்.
ஓரு முறை டாக்டரிடம் செக்கப் பண்ண போன போது நான் டாக்டரிடம் நிறைய விஷியம் கிட்னி ஸ்டோன் பற்றி கேட்டேன்..ஹஸ்பிட்டலில் இருந்து வெளியே வந்து என்னை திட்டி விட்டார்.உன் இஷ்டத்திற்க்கு கேள்வி கேட்டுடே போற என்று சொல்லிவிட்டு....அடுத்த முறை என்னை அழைத்து செல்ல மறுத்து விட்டார்...

Avar pokkil vittu vitunkal

ML

vaazhai tandu juice , tea , water ellam neraya kudikalam. but ithu ellam rembo chinnatha cure pannara stage la irundha. if the stone size and infection is there, then as dr. said need to go to the surgery.

//ஓரு முறை டாக்டரிடம் செக்கப் பண்ண போன போது நான் டாக்டரிடம் நிறைய விஷியம் கிட்னி ஸ்டோன் பற்றி கேட்டேன். ஹஸ்பிட்டலில் இருந்து வெளியே வந்து என்னை திட்டி விட்டார்.உன் இஷ்டத்திற்க்கு கேள்வி கேட்டுடே போற என்று சொல்லிவிட்டு.... அடுத்த முறை என்னை அழைத்து செல்ல மறுத்து விட்டார்...// :-) அவரே யோசனையில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். உடலில் ஒரு பிரச்சினை என்று வந்தால் எல்லோராலும் ஒரே விதமாக எடுத்துக்கொள்ள இயலாது. சிலர், "இவ்வளவுதானே! சிம்பிள்," என்பது போல எடுத்துக்கொண்டு போகலாம். சிலருக்கு வெளியே காட்டிக்கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள் யோசனை இருக்கும். அவர்களிடம் பிரச்சினையைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தால் எரிந்து விழக்கூடும். நீங்க துக்கப்பட வேண்டாம். அவர் நிச்சயம் சரியானதைச் செய்வார்.

//இப்போது நன்றாக இருக்கிறார்.// :-) வெளித்தோற்றத்தை வைத்து நன்றாக இருப்பதாக நினைக்க வேண்டாம் திவ்யா. :-) //இப்போ வரைக்கும் வலி எதும் வரவில்லை என்று சொன்னார்.// வலிக்குது என்று சொன்னால் உங்களிடமிருந்து என்ன கமண்ட் / ஆலோசனை வருமோ என்கிற பயத்தில் கூட அப்படிச் சொல்லியிருக்கலாம். கொஞ்சம் ஃப்ரீயாக விடுங்க.

நான் இப்படி இருந்த காலம் ஒன்று இருக்கிறது. நல்லது என்று நினைத்து யாரும் ஏதாவது சொன்னாலும், அந்த நேரத்து மனநிலையில், "என் கஷ்டத்தைப் புரிந்துகொள்ளாமல் நை நை என்கிறார்களே!" என்பது போல தோன்றும். எரிந்து விழுவேன். சொன்னால் பிரச்சினை என்று சொல்லாமலிருந்தாலும்... உடம்பை நல்லா வைச்சுட்டு சோம்பேறித்தனமா இருக்கிறதா பார்க்கிறவங்களுக்குத் தோணலாம். சிக்கல். :-) நோய் என்று வந்தால்... ஒன்று நோயாளிக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அல்லது மென்மையாக அவர்கள் போக்கில் போய் அவர்களுக்குப் பிடிக்கும் சமயம் அறிந்து பேச வேண்டும். உடம்பில் பிரச்சினை வந்திருக்கும் போது ஒருவர் நடக்கும் முறையை வைத்து ஆளைக் கணிக்கக் கூடாது. வேதனையிலிருக்கும் போது எப்படி ரியாக்ட் பண்ணுவார்கள் என்பதைச் சொல்ல முடியாது.

இன்னொரு விஷயம்... உங்கள் பிறந்த வீட்டாரிடம் எல்லா விஷமும் ஷேர் பண்ணுவீங்களா இன்னமும்? அப்படியிருந்தால் உங்கள் கணவர் உங்களிடம் ரிப்போட், மற்றும் சில விபரங்களை மறைக்க நினைத்தால் தப்பில்லை. நீங்கள் இப்போது தனிக் குடும்பம். உங்கள் கணவர் பற்றிய எந்த விடயமும் அவர் அனுமதி இல்லாமல் உங்கள் பிறந்த வீட்டாரிடமோ நட்புகளிடமோ பகிர்ந்து கொள்வது சரியல்ல. நீங்க அவர் சொல்றதை ரகசியமாக வைச்சிருப்பீங்க என்கிற நம்பிக்கை வருவது போல நடந்துகொள்ளுங்க. அப்படி ஒரு எண்ணம் வந்த பின்னால் எதையும் மறைக்கத் தோன்றாது.

‍- இமா க்றிஸ்

மன்னிக்கவும் இமா அம்மா,இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன் நான் இப்போது என் விட்டரிடம் எதை ஷேர் செய்து கொள்ளுவது இல்லை. நானாக சொல்லவில்லை என்றாலும் என் பிறந்த விட்டர்க்கு தெரிந்துவிடும்..எனக்கே சில விஷியம் என் பிற்ந்த விட்டரிடம் இருந்து தான் தெரிந்து கொள்ளுவேன்.என் கணவர்க்கு முதல் முறை கல் வலி வந்த போது எனக்கு சொல்லவில்லை.என் அண்ணன் பையனுக்கு உடல்நிலை சரி இல்லாமால் ஹஸ்பிட்டல் அழைத்து சென்று உள்ளனர் அப்போது அதே ஹஸ்பிட்டலில் என் கணவர்க்கு ட்ரிப்ஸ் இறக்கி கொண்டு இருந்தனர்..அப்போது தான் எனக்கு தெரியும்.நானும் உடனே ஹஸ்பிட்டலுக்கு சென்றேன்.

:-) ம். உங்க ரெண்டு வீட்டாருக்கும் இடைல பிரச்சினை இருக்கு போல தெரியுது. //நான் இப்போது என் விட்டரிடம் எதை ஷேர் செய்து கொள்ளுவது இல்லை.// அப்போ முன்னால பண்ணி இருக்கீங்க. அதுதான் உங்களிடம் மறைத்ததற்குக் காரணம். //எனக்கே சில விஷியம் என் பிற்ந்த விட்டரிடம் இருந்து தான் தெரிந்து கொள்ளுவேன்.// கொஞ்சம் இடிக்குது. கமண்ட் பண்ண விரும்பல நான். நீங்க யோசிச்சு நடக்கணும் திவ்யா. இது உங்கள் வாழ்க்கை. இப்போ கலியாணம் ஆச்சு. கணவரையும் மாமியார் வீட்டையும் மட்டும் தப்பு சொல்லாதீங்க. நீங்கள் ஒரு பக்கம் சாராமல் இரண்டு பக்கமும் அணைந்து போகப் பாருங்கள்.

//என் கணவர்க்கு ட்ரிப்ஸ் இறக்கி கொண்டு இருந்தனர்.// அப்படியானால் அவரால் பொறுக்க இயலாத நிலமையிலிருந்திருக்கிறார். நீங்கள் லப்ரோஸ்கோபி வேண்டுமா வேண்டாமா, இன்னொரு டாக்டரைப் பார்க்கலாம் என்கிறதையெல்லாம் விட்டுருங்க. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் என்பாங்க.

//என் கணவர்க்கு முதல் முறை கல் வலி வந்த போது எனக்கு சொல்லவில்லை.// ஒரு வேளை நிறையப் பேருக்குத் தெரிஞ்சு ஹாஸ்பிட்டல்ல, வீட்டுல வந்து பார்ப்பாங்கன்னு நினைச்சிருக்கலாம். அது சங்கடமாக இருக்கலாம். முடியாம இருக்கிறப்ப க்ரூப்பா உற்றார், உறவினர் பார்க்க வருவாங்கல்ல! கட்டாயம் வரத்தான் வேணும். அது தப்பு இல்ல. முறை அதுதான். ஆனா, அது நோயாளிக்கு எவ்வளவு கஷ்டம்னு அனுபவிச்சவங்களுக்குப் புரியும்.

இது ஒருத்தர் ப்ரைவஸி சம்பந்தப்பட்ட விஷயமும் கூட. இங்கல்லாம் நோயாளி பர்மிஷன் இல்லாம இன்னொரு ஆளுக்கு... அது ரொம்ப க்ளோஸ் ரெலெடிவ்ஸ் ஆக இருந்தாலும் கூட நோய் பற்றி எந்த நியூஸும் லீக் ஆகாது. பேஷண்ட் அனுமதி இல்லாமல் பார்க்கிற டாக்டரே கூட வீட்டாருக்கு சொல்லக் கூடாது.

ஆனா நீங்க சொன்னது போல, எதிர்பாராம யார்ட்டயாச்சும் மாட்டிக்கலாம். :-)

ஹாஸ்பிட்டல்ல தெரிஞ்சவங்க பலர் வேலை பார்க்கிறாங்க, நான் நினைச்சாலும் நர்ஸ், அட்டெண்டண்ட்னு கரிசனமா உறவுகள்ட்ட சொல்லுவாங்கன்னு சிரமத்தைப் பார்க்காம வேற ஊர்ல இருக்கிற ஹாஸ்பிட்டல்ல போய் அட்மிட் ஆகிருவேன். அப்படியும் பல முறை எதிர்பார்க்காம மாட்டி இருக்கேன். :-)

நான் ஆயிரம் சொன்னாலும் உங்கள் மனது ஆறாது என்று தெரியும். விஷயம் பெரிதாக இருந்தால் நிச்சயம் உங்கள்ட்ட சொல்லுவாங்க. இது மானேஜ் பண்ணக் கூடிய சிகிச்சை என்பதால் யோசிக்காதீங்க. பெருசுபடுத்தாம விட்டுருங்க. கேட்கிற உதவியைச் செய்து கொடுங்க.

‍- இமா க்றிஸ்

என் கணவருக்கு 2MM கிட்னியில் கல் இருக்கிறது.டாக்டர் லேப்ரோஸ்கேப்பி தேவையில்லை என்று கூறிவிட்டார்.மருந்து குடுத்துள்ளார்...

அன்புடையீர் வணக்கம்.....
இரு நாட்களுக்கு முன் வயிற்றில் வலி திடீரென மொடர்ந்து கட்டுக்கடங்காமல் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்ததில் இடது சிறுநீர்ப்பையில் 9.9mm (midpole) வலது பையில் 3.2mm (lowerpole)லில் கல் இருப்பதாக கூறினார்கள்.சில மாத்திரைகளை கொடுத்துள்ளார்கள்....இதற்கு எந்த வகையான மருத்துவம் எடுக்கலாம்???

மேலும் சில பதிவுகள்