ஆலூ டொமேட்டோ கிரேவி

தேதி: February 21, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

உருளைக்கிழங்கு - கால் கிலோ
தக்காளி - ஒன்று
வெங்காயம் - ஒன்று
தயிர் - ஒரு கப்
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2


 

பட்டை, லவங்கம், ஏலக்காய் மூன்றையும் வறுத்து பொடித்துக் கொள்ளவும். தயிரில் கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து கலந்து வைக்கவும். தக்காளியை சிறுத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி வறுத்த மசாலா பொடியை சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து வதங்கியதும் தயிர் கலவையை சேர்த்து வதக்கவும்.
உருளைகிழங்கை பொடியாக நறுக்கி சேர்த்து அதனுடன் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி உருளைகிழங்கை வேக விடவும்.
கிழங்கு வெந்ததும் தக்காளி, கொத்தமல்லித் தழை சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
விரும்பினால் கடைசியாக க்ரீம் மற்றும் முந்திரி சேர்க்கலாம் சுவையாக இருக்கும்.
சுவையான ஆலூ டொமேட்டோ கிரேவி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கடைசி படத்துள்ள அனைத்தும் எனக்கே சூப்பர் ரேவா.. சாப்பாத்தி அண்டு ஆலூ டொமேட்டோ கிரேவி எம்மி எம்மி.. நான் அப்படியே சாப்பிடுவேன்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஆலு தக்காளி கிரேவி செம‌...
கடைசி படம் டாப் டக்கர்...
பிரமாதம் போங்கே...

"எல்லாம் நன்மைக்கே"