தோசை மிளகாய்ப் பொடி

தேதி: February 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

மிளகாய் வற்றல் - 15
உளுத்தம் பருப்பு - கால் கப்
கடுகு - கால் தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பெருங்காயம் - சிறுத் துண்டு
உப்பு ‍ தேவையான அளவு


 

மிளகாய் வற்றலை காம்பு கிள்ளி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு மிளகாய் வற்றலைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்க‌வும்.
பிறகு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்தவற்றை ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள‌வும்.
தோசையுடன் சாப்பிட சுவையான மிளகாய்ப் பொடி தயார். விருப்பப்பட்டால் அரை தேக்கரண்டி எள்ளையும் வறுத்து சேர்த்து பொடித்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அறுசுவை டீம்,
//மிளகாய் வற்றல் - ஒரு படி// ஒரு படி-யா அல்லது ஒரு "பிடி(கைப்பிடி)"-யா?? ஒரு படி மிளகாய்க்கு ஒரு தேக்கரண்டி உளுந்தும் அரைத் தேக்கரண்டி கடலைப்பருப்பும் ரொம்ப கம்மி அல்லவா?? :)
எழுத்துப்பிழை என நினைக்கிறேன். அல்லது இதே அளவுதானா ??

அன்புடன்,
மகி

ஒரு படி மிளகாய் 15 மிளகாயாக மாறியது எப்போ என்று தெரியலை..இன்றுதான் பார்த்தேன். திருத்தத்திற்கு நன்றி! :)

அன்புடன்,
மகி