கம்பு சீனி உருண்டை

தேதி: February 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. பகவதி அவர்களின் கம்பு சீனி உருண்டை என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய பகவதி அவர்களுக்கு நன்றிகள்.

 

கம்பு - கால் கிலோ
சீனி - கால் கிலோ
ஏலக்காய் - 4
முந்திரி பருப்பு - 10
திராட்சை - 6
நெய் - 100 கிராம்


 

கம்பை வறுத்து மாவாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். சீனியைப் பொடி செய்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் திராட்சையை வறுத்துக் கொள்ளவும். ஏலக்காயைத் தூள் செய்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கம்பு மாவைப் போட்டு, அதனுடன் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து, சூடான நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி உருண்டைகளாகப் பிடித்து வைக்கவும்.
சுவையான சத்தான கம்பு சீனி உருண்டை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிச்சன் குயினுக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துகள் :) சத்தான சுவையான உருண்டை சூப்பர் அண்ணி :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.