எரிச்சேரி

தேதி: February 23, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

திருமதி. மாலதி அவர்களின் எரிச்சேரி என்கின்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய மாலதி அவர்களுக்கு நன்றிகள்.

 

சேனைக்கிழங்கு - கால் கிலோ
நேந்திரன் வாழைக்காய் (அல்லது ஏதாவது ஒரு வாழைக்காய்) - ஒன்று
தேங்காய் - ஒரு மூடி
வரமிளகாய் - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 5 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு


 

சேனைக்கிழங்கைத் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள‌வும். வாழைக்காயைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். தேங்காயைத் துருவி வைக்கவும்.
மிக்ஸியில் 5 தேக்கரண்டி தேங்காய் துருவலைப் போட்டு, சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள‌வும்.
மீதமிருக்கும் தேங்காய் துருவலை நன்றாக சிவக்க வறுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு நறுக்கிய சேனைக்கிழங்கைச் சேர்த்து வேக வைக்கவும். கிழங்கு வெந்ததும் தண்ணீரை வடிகட்டிவிடவும்.
மற்றொரு பாத்திரத்தில் வாழைக்காயை வேக வைக்கவும். வாழைக்காய் பாதி வெந்ததும் அரைத்த மசாலா மற்றும் வெந்த சேனைக்கிழங்கைப் போட்டு உப்பு சேர்த்துக் கிளறவும்.
நன்றாக வெந்ததும் வறுத்த தேங்காய் துருவலைச் சேர்த்து ஒரு மத்தால் லேசாக கடையவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து எரிசேரியில் சேர்க்கவும். மீதிமிருக்கும் தேங்காய் எண்ணெயை பச்சையாகவே எரிச்சேரியில் ஊற்றவும்.
சுவையான எரிச்சேரி தயார். இந்த கூட்டை சாதத்தில் போட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாழ்த்துக்கள் மஞ்சுளா.சூப்பரா இருக்கு எரிசேரி

Be simple be sample

Haï மஞ்சுளா
உங்கள் குறிப்பு ரோம்ப அருமை இது எந்த ஊர் சமையல்.
உடனே செய்து பார்க்க வேண்டும்

என்றும் அன்புடன்

ஃபஜிநிசா**fazinisa