Hyper thyroid

வணக்கம் தோழிகளே

எனக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை டாக்டரிடம் காண்பித்த போது எனக்கு TSH 7.3 இருப்பதாக கூறி தினமும் காலையில் வெறும் வயிற்றில் Thyroxine sodium மாத்திரை மாதத்திற்கு சாப்பிட சொன்னார்கள் இரண்டு மாதமாக சாப்பிட்டு வருகிறேன் ஆனாலும் கர்ப்பமாகவில்லை. எனக்கு மாதவிடாய் சுழற்சி காலம் 25 நாட்கள் ஆனால் கடந்த மாதம் 31 நாட்களுக்கு பிறகு ஆனது.

என்னுடைய கேள்வி

தைராய்டு குறைய என்ன உணவு உட்கொள்ள வேண்டும்?

தைராய்டுக்கும் கர்ப்பத்திற்கும் என்ன சம்பந்தம்?

கடந்த மாதம் கர்ப்பமாகி அது கலைந்து விட்டதா?

இந்த சந்தேகத்திற்கு யாரேனும் உதவுங்களேன்

நன்றியுடன்
வனிதா சுரேஷ்

//வெறும் வயிற்றில் Thyroxine sodium மாத்திரை // தொடர்ந்து சாப்பிடுங்க. இது உங்கள் உடற்செயற்பாடுகள் சரியாக இருப்பதற்கு உதவும். கட்டாயம் எடுக்க வேண்டும். மாத்திரை எடுத்துக்கொண்டிருந்தால் உணவு மாற்றம் என்பதைப்பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை.

//தைராய்டுக்கும் கர்ப்பத்திற்கும் என்ன சம்பந்தம்?// தையாய்டுக்கு கர்ப்பத்தோடு நேரடியான சம்பந்தம் இல்லைதான். ஆனால் எங்கள் கவனத்திற்கு வராத, ஒழுங்கற்று இருக்கும் பல செயற்பாடுகள் சரியாகும். இது கர்ப்பமாகும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும். சந்தேகப்பட்டு எடுக்காமல் விடவேண்டாம் சகோதரி.

//கடந்த மாதம் கர்ப்பமாகி அது கலைந்து விட்டதா?// 31 நாட்கள் என்றால் அப்படிக் கணிப்பது இல்லை.

‍- இமா க்றிஸ்

உங்கள் பதிலுக்கு நன்றி இமா அக்கா நான் மாத்திரை தொடர்ந்து சாப்பிடுகிறேன்

enaku mrg munadi thyroide irunthu tablet eduthen, then conceive ana aparam tablet contineu panala athunala 3 months la abot ayitu ine conceive aka enna vali please help me

வணக்கம் தோழிகளே

இன்று எனக்கு 30 வது நாள் இந்த மாதமும் மாதவிடாய் 5 நாட்கள் தள்ளி போயிருக்கிறது காலையில் மிகவும் சோர்வாக உள்ளது மாலையில் தலை வலிக்கிறது மார்பும் வலிக்கிறது கடந்த மாதம் போல ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது

இது எல்லாம் கர்ப்பத்திற்கான அறிகுறியா

எத்தனை நாட்களுக்கு பிறகு home pregnancy test செய்து பார்க்க வேண்டும்

இந்த நேரத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும்

இந்த சந்தேகத்திற்கு யாரேனும் விடை கொடுங்கள்

i m vadivambigai.. enaku marriage aki 1 and half year achu.. last one year ah baby ku try pannarom.. but result negative... period normal.. so i went to doctor...they prescript blood test and pelvis scan.. i do that.. yester day i went to doctor... i see my report and said pco and thyroid starting stage so u take tablet..
blood test - TSH - 4.420 micro/ml and scan statring pco

tablet - Thyronorm 13.5MCG empty stomach
OOSure 1 GM - mor and night after mills
Fopy Min tablet

sister naan daily early mrng empty stomach la 1 litter water kudipen... ippo athe mathi water apparam tablet sapitalama? allathu tablet apparam water kudikava??? then tablet mrng 4.30am sapitalama? pls enaku answer sollunga

//ippo athe mathi water apparam tablet sapitalama? allathu tablet apparam water kudikava???// இரண்டும் ஒன்றுதான். தண்ணீரில் மாத்திரையைக் குழப்பும் பொருட்கள் எதுவும் இல்லை. எப்படி வேண்டுமானாலும் செய்யுங்கள். பிரச்சினை இல்லை. 'வெறு வயிற்றில்' என்பது தண்ணீர் தவிர்ந்த மற்றவற்றை மட்டும் குறிப்பது.

//tablet mrng 4.30am sapitalama?// தாராளமாக. பிறகு ஒரு மணித்தியாலத்திற்கு நீர் தவிர வேற எதுவும் சாப்பிடாம இருந்தால் போதும்.

‍- இமா க்றிஸ்

thanks sister... thyroid enna food avoid pannanum? throid enna food sapital control panna mudium.. pls reply me..

//thyroid enna food avoid pannanum?// பொதுவா தைராய்ட் என்கிறீங்க. :-)

உண்மைல எனக்குக் கிடைக்கும் சிகிச்சையோடு தொடர்பான விடயங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும். ஹைப்போதைராய்டிசம் இருக்கு. கூடவே இன்னும் ஒரு கண்டிஷன் எழுதி இருந்தாங்க. அதுல்லாம் பத்து வருஷத்துக்கு முற்பட்ட கதை. இப்ப மறந்து போச்சு. ஃபைலை எடுத்துப் பார்க்கணும். :-)

//throid enna food sapital control panna mudium..// என் பிரச்சினைக்கு உணவுக் கட்டுப்பாடு எதுவுமே சொல்லவில்லை. உணவினால் மாற்றம் கிடைக்காது என்றார்கள். முன்னால் சாப்பிட்டது போலவே சாப்பிடுகிறேன். டாப்லட்டை மட்டும் ஒழுங்காகப் போடுகிறேன். முதலில் சீவியம் முழுவதும் டாப்லட் போட வேண்டும் என்ற விபரத்தைக் கேட்டதும் ஒரு ஷாக். :-) ஸ்கூல்ல போய் சொன்னால், "ஹாஹா! வெல்கம் டு அவர் க்ரூப்," என்று நான்குபேர் சிரிக்கிறார்கள். 10, 6, 7, 4 என்று டாப்லட் போட ஆரம்பித்த வருஷக் கணக்கு சொன்னார்கள். அதற்கு மேல் கவலைப்படத் தோன்றவில்லை. இப்போ பல் துலக்குவது போல இது இன்னொரு காலைக் கடன். :-) வேலையும் பார்த்து என் குடும்பம், குட்டிகள், அம்மா, அப்பா எல்லோரையும் பார்த்து, பிடிச்சதெல்லாம் பண்ணி, இங்கும் அரட்டை அடிக்கிற அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறேன். என்னமோ தெரியலைங்க, எனக்கு டாக்டர் சொன்னா சரி. சந்தேகம்லாம் அவங்கள்ட்டயே கேட்டுட்டு சொல்ற பதிலை நம்பிட்டு நிம்மதியா இருந்துருறேன்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்