தேதி: February 24, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சாதிகா அவர்களின் க்ரில்டு வெண்டைக்காய் குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சாதிகா அவர்களுக்கு நன்றிகள்.
வெண்டைக்காய் - கால் கிலோ
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கேசரிப்பொடி - ஒரு பின்ச்
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெண்டைக்காயின் அடிப்பகுதியை நறுக்கி விட்டு நீளவாக்கில் நறுக்கி, பின்னர் ஒரு இன்ச் நீளத்திற்கு இரண்டாக நறுக்கி வைக்கவும்.

வெண்டைக்காயுடன் எண்ணெய் சேர்த்து பிசறி மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பேக்கிங் அவனை முற்சூடு செய்து மசாலா தடவிய வெண்டைக்காயை பேக்கிங் ட்ரேவில் பரவலாக பரத்தி வைத்து 250டிகிரி ல் மொறுமொறுப்பாகும் வரை பேக் செய்யவும்.

சுவையான க்ரில்டு வெண்டைக்காய் ரெடி.
