ஓட்ஸ் சூப்

தேதி: February 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்கள் வழங்கியுள்ள ஓட்ஸ் சூப் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

ஓட்ஸ் - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 4
தக்காளி - ஒன்று
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பட்டை - சிறிய துண்டு
பூண்டு - 5 பல்
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவைகேற்ப
உப்பு - தேவைகேற்ப


 

வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் மிக சிறியதாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும்.
பூண்டு வதங்கிய பின்னர் ஓட்ஸை சேர்த்து பிரட்டவும்.
ஓட்ஸை லேசாக வதக்கி, அதனுடன் நான்கு கப் தண்ணீர் ஊற்றி உப்பு மற்றும் தனியா தூளையும் சேர்த்து கொதிக்க விடவும்.
சூப் நன்றாக கொதித்து வெந்ததும் அடுப்பை அணைக்கவும்.
பின்னர் மிளகை பொடித்து சூப்பில் சேர்க்கவும்.
சுவையான ஓட்ஸ் சூப் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இந்த சூப் செய்தேன் நல்லாஇருந்தது