மேங்கோ டேங்கோ ஸ்மூதி

தேதி: February 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் மேங்கோ டேங்கோ ஸ்மூதி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

மாம்பழம் - அரை கப்
அன்னாசிப் பழம் - அரை கப்
வாழைப்பழம் - ஒன்று
புளிக்காத கெட்டி தயிர் - ஒரு கப்
ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப்


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போடவும். தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் 2 அல்லது 3 சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை சேர்க்க தேவையில்லை
பழங்கள் அனைத்தையும் நன்றாக அரைக்கவும்.
அரைத்தவற்றை ஒரு க்ளாஸில் ஊற்றி பரிமாறவும். வெயில் நேரத்திற்கு ஏற்ற சுவையான குளு குளு பானம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Supera irukku photos. Kurippum arumai. Vaazthukkalum paaraattukkalum kitchen queen. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேங்கோ டேங்கோ ஸ்மூதி ரொம்ப சூப்பர் ஷுலா.. செய்முறை ஈசியாகவும் இருக்கு.. வாழ்த்துகள்

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரொம்ப தேங்க்ஸ் வனி, ரேவதி....

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela

Hi மேங்கோ டேங்கோ ஸ்மூதி நல்ல சூப்பர் இருக்கு படம் பார்க்கவே நல்ல இருக்கு நன்றி

என்றும் அன்புடன்

ஃபஜிநிசா**fazinisa