வெண்டைக்காய் குடைமிளகாய் பொரியல்

தேதி: February 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

திருமதி. ஸ்வர்ணா அவர்களின் வெண்டைக்காய் குடைமிளகாய் பொரியல் குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு இங்கே விளக்கப்படங்களுடன் செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ஸ்வர்ணா அவர்களுக்கு நன்றிகள்.

 

வெண்டைக்காய் - கால் கிலோ
குடைமிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 பல்
தக்காளி - ஒன்று
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவையான அளவு


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
வெண்டைக்காய் மற்றும் குடைமிளகாயை அரை இஞ்ச் நீள அளவில் நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். வெண்டைக்காய் வதங்கும் போது உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் போட்டு பிரட்டி விடவும்.
பின்னர் அதனுடன் குடைமிளகாய், தக்காளி சேர்த்து சுருள வதக்கி இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் குடைமிளகாய் பொரியல் ரெடி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் பா பார்க்கும் போதே சாப்பட தொனுது விருப்பப்பட்டியல்ல சேத்துட்டேன்.. வாழ்த்துக்கள்