தேதி: February 24, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் கேப்சிகம் சாம்பார் என்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய லாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.
கேப்சிகம் - ஒன்று
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - ஒன்று
துவரம் பருப்பு - ஒரு கப்
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க : கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, சீரகம், எண்ணெய்
கொத்தமல்லித் தழை
பருப்பை மஞ்சள் தூள், ஒரு சொட்டு எண்ணெய் சேர்த்து வேக வைத்து மசித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி கடுகு, பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் வெங்காயம், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

நறுக்கிய கேப்ஸிகம் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.

சாம்பார் பொடியின் பச்சை வாசம் அடங்கியத்தும் வேக வைத்த பருப்பு சேர்த்து மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

சாம்பார் நன்றாக கொதித்த பின்பு அடுப்பை அணைத்து கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

சுவையான கேப்ஸிகம் சாம்பார் தயார்.

Comments
sheeja
வாழ்த்துக்கள் கிச்சன் குயின்.சாம்பார் கலர்ஃபுல் சூப்பர் எல்லா குறிப்பும்.
Be simple be sample