ஜீரா ஆலு

தேதி: February 25, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. செய்யது கதீஜா அவர்களின் ஜீரா ஆலு என்ற குறிப்பு, சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய கதீஜா அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைகிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 2
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
வற்றல் தூள் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லித் தழை - தேவைக்கு
எண்ணெய் - தாளிப்புக்கு


 

உருளைகிழங்கை முக்கால் வேக்காடாக வேக வைத்து சிறியத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
பின்னர் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், வற்றல் தூள், கொத்தமல்லித் தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி வதக்கியவற்றுடன் ஊற்றவும்.
மசாலா வாசனை போனதும் வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி தீயை குறைத்து வைத்து 5 நிமிடம் வேக விடவும்.
பின்னர் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

இது தயிர்சாதம், பரோட்டா, நாண், பூரியுடன் சாப்பிட ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

Unga receipes pakka varietya aasaiya iruku.nice receipes.vaalthukal sumi....

வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப‌ நன்றிங்க‌..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....