உருளை பர்ஃபி

தேதி: February 25, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. விஜி அவர்களின் உருளை பர்ப்பி குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய விஜி அவர்களுக்கு நன்றிகள்.

 

உருளைக்கிழங்கு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
சன்ன ரவை - ஒரு கப்
நெய் - 5 தேக்கரண்டி
ஏலக்காய் - 3


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ரவையை வாசம் வரும் வரை வறுத்து எடுத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து கட்டிகளில்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். (மசித்தபின் உள்ள கிழங்கின் அளவிற்கு சமமாக சர்க்கரை சேர்க்க வேண்டும்.)
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் விட்டு அதில் மசித்து வைத்துள்ள கிழங்கையும், சர்க்கரையும் சேர்த்து நன்றாக கலந்து குறைந்த தீயில் வைத்து அடிபிடிக்க விடாமல் கைவிடாமல் நன்றாக கிளறவும்.
உருளைக்கிழங்கு கலவை நன்கு கொதித்து வரும் போது வறுத்து வைத்த ரவையை சிறிது சிறிதாக மேலே தூவி கட்டிகள் விழாமல் நன்கு கிளறவும்.
கலவை நன்கு திரண்டு வரும் போது ஏலக்காய் தூள் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியதும் விரும்பிய வடிவத்தில் துண்டுகள் போடவும்.
சுவையான உருளை பர்ஃபி தயார்.

சிகப்பு உருளையில் செய்தால் கொஞ்சம் பட்டரி டேஸ்டோடு நன்றாக இருக்கும்.

ரவையை சேர்த்த பின்பு நன்கு கைவிடாமல் கிளறவும், இல்லையெனில் கட்டிகளாகும் வாய்ப்பு அதிகம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

உருளை பர்பி டிப்ஸ் சூப்பரோ சூப்பர்,
நான் தான் 1ஸ்ட் எனக்கு 1 பீஸ் எடுத்துக்கிட்டேன்......
புட் கலர் வேண்டாமோ?

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

வருகைக்கும் வாழ்த்திற்க்கும் ரொம்ப‌ நன்றி சுபி. புட் கலர் தேவையில்லை சுபி.உருளையின் கலரே போதும்.
//நான் தான் 1ஸ்ட் எனக்கு 1 பீஸ் எடுத்துக்கிட்டேன்..// சுபிக்கு இல்லாததா?.. எல்லாமே சுபிக்கு தான்...:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

சுமி
ஸ்வீட் வெரி டேஸ்டி.
சிவப்பு உருளைன்னா சர்க்கரைவள்ளிக் கிழங்கா?

உருளைக்கிழங்கையே தான் சொல்றாங்க நிகிலா. சிவப்பு நிறத்துல உருளைக்கிழங்கு இருக்கு.

‍- இமா க்றிஸ்

பதிவுக்கு எனது நன்றிகள் நிகிலா.. முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

//உருளைக்கிழங்கையே தான் சொல்றாங்க நிகிலா. சிவப்பு நிறத்துல உருளைக்கிழங்கு இருக்கு.// அதே.. அதே.. இமாம்மா.. :)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

இமா, சுமி
இங்கே கிடையாது. நான் பார்த்ததில்லை.
பேபி உருளைன்னு குட்டியா உண்டு. அவ்வளவுதான்:)