தேதி: March 30, 2006
பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கோழி - ஒன்று
தயிர் - ஒன்றரை கப்
பூண்டு விழுது - அரைத் தேக்கரண்டி
இஞ்சி விழுது - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி
வெங்காய சாறு - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி விழுது - ஒன்றரை கப்
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
சீனி - ஒரு மேசைக்கரண்டி
சிகப்பு வண்ண பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தக்காளி கெட்ச்அப் - 3 மேசைக்கரண்டி
முந்திரி - ஒரு கப்
வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கோழி இறைச்சியினை நன்கு கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காய விழுதுகளுடன் தேவையான உப்பு சேர்த்து தயிருடன் கலந்து அதில் கோழித் துண்டங்களைப் போட்டு சுமார் 5 அல்லது 6 மணி நேரம் ஊறவிடவும்.
தக்காளி விழுது, மிளகாய்த்தூள், சீனி, சிகப்பு வண்ணம், தேவையான உப்பு ஆகியவற்றை ஒரு வாணலியில் இட்டு வேகவிடவும்.
நன்கு வெந்து சாஸ் போல் கெட்டியானவுடன் இறக்கி அதில் தக்காளி கெட்ச் அப், 2 மேசைக்கரண்டி வெண்ணெய் மற்றும் பொடித்து வைத்துள்ள முந்திரியைச் சேர்த்து தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு ஊற வைத்துள்ள கோழித்துண்டுகளை எடுத்து வேகவிடவும்.
இறைச்சியில் உள்ள நீர் வற்றி நன்கு வெந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள சாஸினை எடுத்து இதன் மேல் ஊற்றி மேலும் 5 நிமிடம் வேகவிடவும்.
நன்கு வெந்தவுடன் இறக்கி மீதமுள்ள ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய்யை மேலே ஊற்றி பரிமாறவும்.
Comments
i think if we reduce tomato
i think if we reduce tomato ketchup it will be more tastier than this