புடலங்காய் குழம்பு

தேதி: February 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

திருமதி. துஷ்யந்தி அவர்கள் வழங்கியுள்ள புடலங்காய் குழம்பு என்ற குறிப்பு, கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்டு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய துஷ்யந்தி அவர்களுக்கு நன்றிகள்.

 

பிஞ்சு புடலங்காய் - ஒன்று
நல்லெண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம், சோம்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - பாதி
பூண்டு - 6 பல்
தக்காளி -2
மெட்ராஸ் கறித்தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் பால் + பசுப்பால் (ஆவின்பால்) - ஒரு கப்
தண்ணீர் - அரை கப்


 

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். புடலங்காயை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை, புடலங்காய் போட்டு சுருள வதக்கவும். பின்பு மஞ்சள் தூள், மெட்ராஸ் கறித்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சுருள வதக்கவும்.
அனைத்தும் சுருள வதங்கியதும் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கிளறி கொதிக்க விடவும்.
கலவை கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும். புடலங்காய் குழம்பு தயார்.

மெட்ராஸ்கறித்தூள் செய்ய :
வெறும் மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி, தனியா தூள் - அரை தேக்கரண்டி, மிளகு, சீரகம், சோம்பு - தலா கால் தேக்கரண்டி இவையனைத்தையும் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்