நூல்கோல் வடை

தேதி: February 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட, திருமதி. நித்யா கோபால் அவர்களின் இந்த நூல்கோல் வடை குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்துகாட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய நித்யா அவர்களுக்கு நன்றிகள்.

 

நூல்கோல் - 2
பொட்டுக்கடலை மாவு - ஒரு கப்
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - ஒரு துண்டு
வெங்காயம் - 3
கறிவேப்பிலை - சிறிது
பூண்டு - 10 பற்கள்
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - கால் கப்
சோம்பு - கால் தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - சிறிது


 

நூல்கோலைத் தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு, உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் துருவிய நூல்கோலை சேர்த்து கிளறி விடவும்.
கடைசியாக பொட்டுக்கடலை மாவை சேர்த்து எல்லாம் ஒன்றாக சேரும்படி கிளறி இறக்கவும்.
இந்த கலவையில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையை போட்டு பிசையவும்.
கலந்த மாவை சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான நூல்கோல் வடை தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நூல்கோல் வடை.. கடைசி பிளேட்டேடு நான் எஸ்ஸாரேன்.. சூப்பரா இருக்கும்மா.. சொல்லி சொல்லி வாய் வலிக்குது..(சாரி கை வலிக்குது)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்