தேதி: February 27, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. நித்யா கோபால் அவர்களின் சேப்பங்கிழங்கு கறி (ஆர்பி க சாக்) குறிப்பு விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பினை வழங்கிய நித்யா கோபால் அவர்களுக்கு நன்றிகள்
சேப்பங்கிழங்கு - ஒன்றரை கப்
ஓமம் - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
தனியாத் தூள் - அரை தேக்கரண்டி
எலுமிச்சைச் சாறு - அரை தேக்கரண்டி
எண்ணெய் - கால் மேசைக்கரண்டி + கால் கப் (பொரிப்பதற்கு)
உப்பு - அரை தேக்கரண்டி
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். சேப்பங்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் கால் கப் எண்ணெய் ஊற்றி, சேப்பங்கிழங்கைப் போட்டு பொரிக்கவும்.

கிழங்கு பொன்னிறமானதும் தனியாக எடுத்து வைக்கவும்.

பிறகு வாணலியில் கால் மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு, கடுகு மற்றும் ஓமத்தைப் போட்டு பொரிய விடவும். பொரிந்ததும் சேப்பங்கிழங்கைச் சேர்த்து, மிளகாய்த் தூள், தனியாத் தூள், எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்.

சுவையான சேப்பங்கிழங்கு கறி (ஆர்பி க சாக்) தயார். சூடாகப் பரிமாறவும்.
