தேதி: February 27, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ராஜலெட்சுமி அவர்களின் பூவா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ராஜலெட்சுமி அவர்களுக்கு நன்றிகள்.
கோதுமை - கால் கிலோ
சீனி - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 10
திராட்சை - 6
ஏலம் - 4
உப்பு - ஒரு சிட்டிகை
டால்டா - 50 கிராம்
எண்ணெய் - 100 கிராம்
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் டால்டா, உப்பு, சீனி, ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை சேர்த்து கலக்கவும்.

அந்த கலவையில் சிறிது சிறிதாக தண்ணீரை ஊற்றி வடை மாவு பதத்திற்கு பிசையவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து விரும்பிய வடிவத்தில் செய்யவும், அல்லது அச்சில் வைத்து செய்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் பூவாவை போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான பூவா ரெடி. மாலை நேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்துக் கொடுக்கலாம்.

Comments
பூவா
கல்ப்ஸ் பூவா பூப்பூவா மலர்ந்திருக்கு சூப்பர் :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
பூவா
பூவா
ஹையா அழகா இருக்கு கல்ப்ஸ்
கல்பூ
பூ பூவா சுட்டிருக்கு பூவினிலே ஆயிரம் பூ.. பூவிலே சிறந்த பூ என்ன பூ??? அது கல்பூ..
சூப்பர் கல்ப் பூவா பெயரும் சூப்பர்.. செய்முறையும் சூப்பர்.. படங்கள் பளீச்சென்று இருக்கு.. வாழ்த்துகள் கல்ப் கலக்கல் ரெசிபி.. பூவா செம்ம சூப்பரா வந்திருக்கு. இது பிஸ்கெட் தானாா நான் கடையில் சாப்பிட்டுயிருக்கேன்.. நிச்சயம் ட்ரை பண்றேன்.. அடி தூள்..
இதை அவனிலும் செய்யலாமா கல்ப்??
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்