கச்சான் அல்வா

தேதி: February 27, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சீனி (Sugar) - ஒரு கப்
வேர்க்கடலை (கச்சான் கடலை) - ஒரு கப்
நசுக்கிய ஏலக்காய் - சிறிது


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சீனியைப் போட்டு, சுடுநீரில் ஒரு கையளவு தெளித்து சீனி கரையும் வரை சூடாக்கவும். கம்பி பதத்திற்கு வரும்முன் ஏலக்காயைப் போட்டு அடுப்பை நிறுத்திவிட்டு, வேர்க்கடலையைப் போட்டு நன்றாக கிளறவும்.
பிறகு இந்தக் கலவையை வெண்ணெய் தடவிய தட்டில் ஊற்றவும். ஒரு நிமிடத்திற்குப் பிறகு சூட்டுடனே பிய்த்தெடுத்து உருண்டையாகவோ, தட்டியோ வைக்கலாம்.
சுவையான கச்சான் அல்வா ரெடி. ஆறிய பிறகு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எம்மாடி பெயர்களை எப்படியெல்லாம் தேடி பிடிக்கிறீங்க.. கச்சான் அல்வா படங்கள் பளீச்.. கார்னிஸ் சூப்பர்ம்மா.. வித விதமான செய்து கலக்கியிருக்கீங்க.. ம்ம் லிஸ்ட் ரெடி பண்றேன் வீட்டுக்கு வரும் போது அனைத்தும் இருக்கனும் ஆமா சொல்லிபுட்டேன்..

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்