லெமன் ரைஸ்

தேதி: February 2, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

பாசுமதி அரிசி - அரை படி
எலுமிச்சைச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3/4 படி
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயத்தூள் - ஒரு ஸ்பூன்
நல்லெண்ணெய் - 50 மில்லி
மஞ்சள்தூள் - ஒரு ஸ்பூன்
உப்பு - 3 ஸ்பூன்


 

முதலில் அரிசியை கழுவி 2 ஸ்பூன் உப்பு சேர்த்து 3/4 படி தண்ணீருடன் பதமாக வேகவைத்து, ஆப்பையால் பொலபொலவென்று உதிர்த்துவிட்டுக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, கடலைப்பருப்பை போட்டு லேசாக சிவக்கவிடவும்.
அத்துடன் பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு எலுமிச்சைச்சாறு, மீதி உப்பை சேர்க்கவும்.
பிறகு வேகவைத்துள்ள சோறை அதில் கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.
எலுமிச்சை ஊறுகாய் மற்றும் பொரித்த கோழி அல்லது பொரித்த பீஃப் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

தொந்திரவிற்க்கு மன்னிக்கவும்.நீங்கள் பீஃப் வறுவல் எப்படி செய்வீர்கள்

sajuna

பீஃப் வறுவல் செய்முறையை என்னுடைய குறிப்பில் உங்களுக்காக விரைவில் சேர்க்கிறேன். கேட்டதுவரை எனக்கு ரொம்ப சந்தோஷம், தொந்தரவு ஒன்றுமில்லை.

பீஃப் வறுவல் என்னுடைய குறிப்புகளில் இணைத்துள்ளேன். செய்துபாருங்கள்.

உடன் ரெசிப்பி கொடுத்தமைக்கு நன்றி.செய்து பார்க்கிரேன். மிகவும் நன்றி.

sajuna

அஸ்மா அக்கா! உங்க லெமன் ரைஸ் செய்தேன் .. இதே முறைதான் எங்க வீட்டிலும் சேம் பின்ச்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

அஸ்மா... நோன்பு நடப்பதால் இந்தப் பக்கம் வருவதில்லையோ?
உங்கள் லெமன் றைஸ் செய்தேன் மிகவும் நன்றாக வந்தது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அஸ்மா! இன்று உங்கள் லெமன் ரைஸ் செய்து சுவைத்தேன்.
நன்றாக இருந்தது. நன்றி உங்கள் குறிப்புக்கு. அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

வீட்டுல இதே மாதிரி தான் செய்வாங்க.. கட்டிச்சோறு ன்னு.. எங்கயாவது பயணம் செய்யறதா இருந்தா.. அதே சுவை.. நன்றி அஸ்மா..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

hi asma nalla irukkingala.unga lemon rice super,unga oor ethunnu nan therinchukkalama

இன்று உங்கள் லெமன் சாதம் செய்தேன்.மிக மிக சுவையாக இருந்தது.
சுவையான குறிப்புக்கு நன்றி.