தேதி: February 28, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
வஞ்சீரம் (அ) வவ்வால் மீன் - 2 துண்டுகள்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
புளி - கொட்டைப்பாக்கு அளவு
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
வாழை இலை - 2 துண்டுகள்
மீனை மசாலா தடவி வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

அதில் மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டி விட்டு, புளியை கரைத்து ஊற்றி கெட்டியானதும் இறக்கவும்.

வாழையிலையின் அடிப்பாகத்தை அனலில் காண்பித்து எடுத்து உள்பக்கமாக எண்ணெய் தடவி மசாலாவை அதில் வைக்கவும்.

அதன் மேல் வறுத்த மீனை வைக்கவும். மீண்டும் மசாலாவை மேலே வைத்து இலையை மூடி கட்டவும்.

தவாவில் மீனுடன் வைத்து கட்டிய வாழையிலையை வைத்து மிதமான சூட்டில் வேக வைத்து வாழையிலை சுருங்க வெந்ததும் எடுக்கவும்.

சுவையான வாழையிலை மசாலா மீன் தயார். கேரள உணவான இது அங்கு பொதியல் மீன் என்று சொல்லுவார்கள்.

Comments
ரேவா
வாழையிலை மீன் வந்தாச்சா.. சூப்பர் ரேவா.. கலர்புல் வாழையிலை மீன் செம்ம சூப்பர்.. டேஸ்டும் சூப்பரா இருக்கும் போல.. கலக்கல் ரேவா..
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
ரேவ்ஸ்
சூப்பர்... எனக்கு இந்த வகை மீனின் சுவையும் மனமும் பிடிக்கும். அவசியம் அடுத்த வாரத்தில் ஒரு முறை செய்துடுவோம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
friends
Thanku rev.
Thanku vani seithu parugo..
Be simple be sample
மீன் மனம்
வனீஸ்... ;))) மீனுக்கு மனம் இருக்கிறது உண்மையா இருந்தா அதைச் சாப்பிடுறது தப்பாச்சே! ரொம்பவே ஃபீல் பண்ணப் போகுது, பாவம். ;)))
ரேவ்ஸ்... எனக்கு மீன் பற்றி பெருசா தெரியாது. அது வௌவால் மீன் இல்லையா! இல்லாட்டா வவ்வாலேதானா?
- இமா க்றிஸ்
இமாமா
//ரேவ்ஸ்... எனக்கு மீன் பற்றி பெருசா தெரியாது. அது வௌவால் மீன் இல்லையா! இல்லாட்டா வவ்வாலேதானா?// இதன் பெயர் வாவல் மீன். பேச்சுவழக்கு ல வவ்வால் ஆகிவிட்டது. எங்கள் ஊர் பக்கம் இன்னும் இதன் பெயர் வாவல் தான்.
ரம்யா ஜெயராமன்
இமா
சிக்கிட்டனா ;)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
எப்படி நான் எனது குறிப்புகளை post செய்வது?
நான் ஒரு சில சமையல் குறிப்புகளை இந்த வலைப்பதிவில் பதிவு செய்ய ஆர்வம் கொண்டுள்ளேன்.. ஆனால் அவற்றை எப்படி போஸ்ட் பண்ணுவது என தெரியவில்லை… நண்பர்கள் உதவுவீர்களா?! ப்லீஸ்..!!
நடப்பதெல்லாம் நன்மைக்கே
கவிபிரியா
உங்க குறிப்புகள் போட்டோ& விளக்கத்துடன் arusuvaiadmin@gmail.com க்கு மெயில் பண்ணுங்க. அறுசுவை டீம் வெளியிடும். குறிப்புகள் வெளிய இருந்து எடுத்து அப்படியே காப்பி பண்ணி அனுப்பகூடாது,சில மாற்றங்கள் செய்து உங்க ஸ்டைல்ல அனுப்பலாம். கீழே விதிமுறைகள் பார்த்தாலும் தெளிவு வரும். சீக்கிரம் உங்கள் குறிப்புகள் வெளிவர வாழ்த்துக்கள் தோழி.
Be simple be sample
வனி 'மனம்' மணம் கவனிக்கல
வனி 'மனம்' மணம் கவனிக்கல நான். டீச்சர் வந்து கண்டுபிடிச்சுட்டாங்க :).
அந்த மீன் வெளவாலா, இல்லை வவ்வால் மீன். இது நாள் வரைக்கும் யோசிக்கவே இல்ல. என்னை கொஞ்சம் மன்னிச்சு இமாம்மா, சென்னைல வளர்ந்ததால தமிழ் எனக்கு நிறைய மருவி தான் வரும்..:)
ரம்யா இந்த மீனுக்கு இதான் பெயரா,இன்னைக்குதான் தெரியும்ப்பா.
Be simple be sample
மிக்க நன்றி தோழி
மிக்க நன்றி தோழி எஸ். ரேவதி அவர்களே. உங்களின் சமையல் குறிப்புகளும் மிகவும் அருமை.
நடப்பதெல்லாம் நன்மைக்கே
கவிபிரியா
தான்க்யூ. சீக்கிரம் உங்க குறிப்புகள் அனுப்புங்க. காத்திருக்கிறோம்.
Be simple be sample
@ at அட்
அழகாக பதில் சொல்லியிருக்கீங்க ரேவ்ஸ். :-) அட்மின் கூட எங்கேயும் இப்படி ஒழுங்கா அறுசுவை ஈமெய்ல் அட்ரஸ் டைப் பண்ணினது கிடையாது. ;) @ போடுற இடத்துல at அல்லது 'அட்' என்று மாற்றித்தான் போட்டு வைக்கிறாங்க. அவங்க காரணமில்லாமல் அப்படிப் பண்ண மாட்டாங்க இல்லையா! முன்னால எப்பவோ, ஸ்பாம்ஸ் கதை என்னவோ சொல்லியிருந்தாங்க. போஸ்ட்ல இன்னும் 'மாற்றுக' ஆப்ஷன் இருந்தால், நான் சொன்ன மாதிரி மாற்றி விடுங்க. இல்லாட்டா... இனிமேல் இப்படிப் போடாம கவனமா போடுங்க. :-)
- இமா க்றிஸ்
இமாம்மா
இமாம்மா மாற்றுக இல்ல. நாந்தான் பதிலளி தட்டிட்டனே :) . இனி கவனித்து போடறேன். ஆனா விளக்கம் குடுத்த தோழிக்கு தெளிவா புரிந்திருக்கும்ன்னு நினைக்கிறேன். நானும் கவனம் வைத்துக்கொள்கிறேன்.
Be simple be sample
Madam is it required to use
Madam is it required to use oil on thawa while frying in pan with banana leaf and is it required to close the pan?,