மிளகாய் கிள்ளி சாம்பார்

தேதி: March 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (7 votes)

 

துவரம் பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 6
பூண்டு - ஒன்று
கடுகு, சீரகம், வெந்தயம் - தலா ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிது
எண்ணெய் - தேவையான‌ அளவு
உப்பு - தேவையான‌ அளவு


 

துவரம் பருப்பைக் கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், தோலுரித்த பூண்டு, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேகவிடவும்.
பருப்பு வெந்ததும் இறக்கி தண்ணீரை வடித்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து காய்ந்த மிளகாய், தோலுடன் தட்டிய பூண்டு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
தாளிப்பிலிருந்து காய்ந்த மிளகாயை மட்டும் பருப்பில் கொட்டி உப்பு சேர்த்து கடைந்து கொள்ளவும்.
அதன் பிறகு தாளித்தவற்றுடன் புளிக் கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
புளிக் கரைசல் கொதித்ததும் கடைந்த பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
இது சென்னை ஸ்பெஷல் மிளகாய் கிள்ளி சாம்பார். சாதத்துடன் சாப்பிடுவதற்கேற்ற‌ சரியான் காம்பினேஷன். இதனை உருளை வறுவல், சிக்கன், மீன் என காரமான சைட் டிஷ்ஷுடன் சாப்பிட‌ அருமையாக‌ இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நம்ம ஊர் பக்க குறிப்போ?? அம்மாவும் இது போல செய்வாங்க... வெறும் அப்பளம் இருந்தா போதும், எனக்கு ரொம்ப விருப்பம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அண்ணா& டீம் மிக்க நன்றி

Be simple be sample

Ama vani, Nama ooru SPL, EGA veetula ellarukum pidikum apppalamey pothum

Be simple be sample

மிளகாய் பொடி சேர்க்க மாட்டிங்கால

Ilapa ithula specialey no chill powder

Be simple be sample