லெமன் போஹா

தேதி: March 2, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

கெட்டி அவல் - 2 கப்
எலுமிச்சை - 2
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு
தாளிக்க:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - முக்கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - 2 கொத்து


 

எலுமிச்சையை சாறு பிழிந்து, அதில் சிறிது நீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
அவலை ஓடும் நீரில் அலசி வைக்கவும்.
எலுமிச்சை சாறு கலந்த நீரை அவலில் ஊற்றி, தேவைப்பட்டால் கூடுதலாக தண்ணீர் ஊற்றி (அவல் மூழ்கும் அளவு போதுமானது) அவலை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். அவல் நன்றாக நீரை இழுத்துக் கொள்ளும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். கடைசியாக பெருங்காயம் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்துவிடவும்.
வதக்கியவற்றுடன் ஊற வைத்த அவலைச் சேர்த்து லேசாகப் பிரட்டவும். ஊறிய பிறகு மீதம் சிறிது நீர் இருந்தாலும் பரவாயில்லை, அதையும் சேர்த்தே பிரட்டவும். உடையாமல் கவனமாகப் பிரட்டிவிட்டு 10 நிமிடங்கள் சிறு தீயில் மூடி வைத்து வேகவிட்டு இறக்க‌வும்.
சுவையான லெமன் போஹா தயார்.

விரும்பினால் முந்திரி அல்லது வேர்க்கடலை வறுத்து சேர்க்கலாம்.

அவல் மூழ்கும் அளவு மட்டுமே நீர் விட்டால் முழுவதுமே அவல் இழுத்துக் கொள்ளும். அதிகமாக இருந்தால் அவல் வேகும் போதும் குழைந்து போகும். அதே சமயம் நீர் குறைவாக இருந்தால் அவலுக்கு தேவையான நீர் இல்லாமல் சரியாக வேகாதது போல் இருக்கும்.

பச்சை மிளகாய் சேர்க்க விரும்பாதவர்கள் காய்ந்த மிளகாய் சேர்க்கலாம். எலுமிச்சை சாறு முதலில் கலந்து ஊற வைக்காமல் அவல் வெந்த பின் கடைசியாக பிழிந்து விட்டும் கலந்து எடுக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

tasty tasty it is :)