நல்ல‌ வாழ்க்கை அமைய‌ பிரார்த்தனை வேண்டும்

தோழிகளே எனக்கு தெரிந்த‌ பெண்ணிற்காக‌ இந்த‌ இடத்தில் ஒரு உதவி கேட்கிறேன்

அவள் எனக்கு மிகவும் நன்கு தெரிந்த‌ பெண் மிகவும் நல்ல‌ குணமுள்ளவள், என்னுடன் மட்டுமல்லாமல் பணிபுரியும் அனைவரிடமும் நன்கு பழக‌ கூடியவள்,
ஏதோ ஒரு காரணத்தினால் அவளுக்கு திருமணம் அமையவில்லை, ஏற்கனவே அவள் குடும்ப‌ சூழ்நிலையால் சில‌ மாதங்களாக‌ தான் வரன் பார்க்கவே செய்கிறார்கள், அவளுக்கு சீக்கிரம் நல்ல‌ இடத்தில் நல்ல‌ வரன் அமைய‌ அனைத்து தோழிகளின் பிரார்த்தனை இருந்தால் நன்றாக‌ இருக்கும் என‌ மனதில் பட்டது, அதற்காக‌ இந்த‌ பதிவு,

அவள் உறவுகளிடமும், உடன் பணிபுரிவர்களிடமும் நிறைய‌ கேள்விகளுக்கும், வார்த்தைகளுக்கும் ஆளாகிறாள். அவள் அதை பெரிதாக‌ எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவள் மனமும், கண்களும் அவ்வப்போது என்னிடம் கூறி கலங்க தான் செய்கிறது,

அவளுக்கு நல்ல‌ வரன், நல்ல‌ வாழ்க்கை அமைய‌ உங்கள் ஆசியுடன் பிரார்த்தனையும் தேவை.

Ungaludaya tholiku nalla poruthamana manamagan kidaika ellam valla iraivan thunai iruka ppirathikirom.kavalayai vittu nambikkaiyudan irukachullungal.nambikkaye manithanin palam.best of luck.

உங்க‌ தோழிக்கு நல்ல‌ வாழ்க்கை துணை கிடைப்பார்.......எல்லாம் வல்ல‌ இறைவன் ஆசீர்வாதம் உங்கள் தோழிக்கு உண்டு.....தினமும் இரண்டு நிமிடம் உங்கள் தோழிக்காக் நான் ப்ராத்தனை செய்கிறேன்......

உங்கள் பிரார்த்தனைக்கு மிகவும் நன்றி. அவளுக்கு பல நம்பிக்கை வார்த்தை கூறிக் கொண்டு தான் இருக்கிரேன் நன்றி.

ரொம்ப‌ நன்றி உங்கள் நம்பிக்கை தரும் வார்த்தைக்கு, நானும் அவளுக்கு தினம் கடவுளிடம் வேண்டுவதுண்டு,2 நிமிடம் உங்கள் வேண்டுதல் மிகவும் நன்றி.
அதற்கு தான் இங்கு பதிவிட்டேன் பல‌ நல் உள்ளங்கள் இருப்பதால்,

unga thozliyai kavalai padamaal iruka sollunga . pesuravanga pesittey dhan irupanga .. atha ellam bother panna kudathu . avanga ellam namba life uh mudivu pandravanga illa . god only , so others avangakaga pray pandrathu irunthalum , ava first pray pannanum, athula dedication irukanum . money spend panni pray pandratha vida ... manasara god kitta avala kanna mudi vendi ketka sollunga. nallathe nadakkum . kovil ku pora habbit uh vachika sollunga. veetla um samrani poda sollunga bad viberation avala suthi iruntha poedum . enakku therinja kovil names soldren . anga poe pray panna sollunga . athu marriage aagathavanga pora temples nu history solluthu.try pannuvome ...

1. Nithya kalyana perumal kovil, thiruvidanthai, near kovalam. anga maalai pottu kovil la suthi vara solluvanga anga irukura archagar kitta innum details kettukonga. neraiya peruku anga pona seekrathu la marriage nadanthu iruku . and marriage mudinji antha maalai uh kovil kulathula poda solluvanga pa.

2. chennai putlur amman .. 2 months, only friday , oru week kuda thavarama poe amman uh kumbittu varanum . anga irukuravanga innum details solluvanga. kalyanam aaganum, kulanthai pirakanum nu neraiya peru varuvanga. friday antha kovil la thiruvila dhaan. wet dress oda kovil uh suthi vara solluvanga. athuku nu water facilities iruku. ithu basic anga. vepilla , lemon oda amman uh paaka line nikkanum . 10 mani kitta irunthu rush aagum so munadiye poe paarunga. antha viberation iruku . na inga ad koduka post pannala. unga frnd ku enakku therinja way ah dhaan solluren . ithunala avanga ku nallathu nadantha enakkum santhosham ... ALL THE BEST

வாழ்க்கை வாழ்வதற்கே!

எனக்கு தெரிந்து திருமணம் தாமதிக்கிறவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததுண்டு. கடவுளாகப் பார்த்து அவர்களின் பொறுமைக்கு கொடுக்கும் பரிசு என்று நினைத்திருக்கிறேன்.

\\அவள் மனமும், கண்களும் அவ்வப்போது என்னிடம் கூறி கலங்க தான் செய்கிறது,//

நிச்சயம் நீங்க அவங்களை நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது. தொடர்ந்து உங்களின் தோழிக்கு ஆதரவாக இருங்கள். நானும் உங்கள் தோழிக்காக பிராத்திக்கிறேன்.

உங்கள் அக்கறையான பதிலுக்கு நன்றி, ஆமாம் பேசிறவங்களால‌ ஒரு புரோஜனமும் இல்ல‌ தான் அதை பலமுறை சொல்லிட்டேன், அந்த‌ வார்த்தைகள் மனச‌ பாதிக்குது சொல்றா,

நீங்க‌ சொல்றது ரொம்ப‌ சரி, இங்கேயும் நிறைய‌ கோயில் இருக்குங்க‌ ஆனா அவங்க‌ வீட்ல‌ ஸ்டெப் எடுக்க‌ மாட்டேங்குறாங்க‌ யாரும் கோயிலுக்கெல்லாம் கூட்டி போரது இல்ல‌, அவளா சொன்னா ஒரு மாதிரி பார்க்கிறாங்களாம் அவ‌ தனியா போனாலும் தப்பா நினைப்பாங்கனு யோசிக்கிறா, என்ன‌ தான் நான் க்ளோஸா இருந்தாலும் அவங்க‌ வீட்ல‌ தலையிட‌ முடியாதுல‌ அதான் ப்ராப்ளம் , என்னால‌ அவளுக்காக வேண்ட மட்டும் தான் முடியுது.

இருந்தாலும் நீங்க‌ சொன்னதை சொல்றேன்பா,

(எனக்கு தெரிந்து திருமணம் தாமதிக்கிறவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததுண்டு) கண்டிப்பா இதை தான் நான் அடிக்கடி சொல்லிட்டே இருப்பேன், ஆனா கடவுள் எப்போ அவளுக்கு கருணை காட்டுவாளோ தெரில‌,

உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி வாணீ.

மேலும் சில பதிவுகள்